எம்ஜிஆரின் சொந்த தயாரிப்பில் உருவான நான்கு திரைப்படங்கள்! வெற்றியா? தோல்வியா?

By Velmurugan

Published:

மக்கள் திலகம் எம்ஜிஆர் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொந்தமாக நான்கு திரைப்படங்களை தயாரித்து உள்ளார். இந்த திரைப்படங்கள் குறித்த முழு தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலாவதாக எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் 1958 இல் வெளிவந்த திரைப்படம் நாடோடி மன்னன். இந்த திரைப்படத்தை நடிகர் எம் ஜி ஆர் தயாரித்து இயக்கியிருந்தார். முதல் முதலில் எம்ஜிஆர் தயாரிப்பில் வெளியாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 150 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனையை படைத்திருந்தது. மதுரையில் பிரம்மாண்ட திரையரங்கு ஒன்றில் 120 நாட்களுக்கு மேல் இந்த திரைப்படம் மிகச்சிறப்பாக ஓடியது. இந்த படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து சரோஜாதேவி நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படம் பாதி கருப்பு வெள்ளையாகவும் பாதி கலர் படமாகவும் உருவாகி இருந்தது. எஸ் எம் சுப்பையா நாயுடு இசையில் நாடோடி மன்னன் திரைப்படத்தில் மிகச்சிறப்பான பாடல்கள் இடம் பெற்றிருந்தது.

அடுத்து இரண்டாவதாக எம்.ஜி.ஆர் தயாரித்த படம் 1969ல் வெளிவந்த அடிமைப்பெண் படமாகும். இந்த படத்தை எம்ஜிஆர் தயாரித்தார் ஆனால் இயக்கவில்லை. சங்கர் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு கே வி மகாதேவன் இசையமைத்தார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படங்களில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து பட்டி தொட்டி எல்லாம் பரவியது. மேலும் இந்த திரைப்படம் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடி எம்ஜிஆருக்கு மிகப்பெரிய லாபத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் ஒரு சிறப்பாக இந்த படத்தில் எம்ஜிஆருக்கு எஸ்பி பாலசுப்ரமணியன் முதல் முதலில் குரல் கொடுத்து பாடியிருந்தார்.

மூன்றாவதாக நடிகர் எம் ஜி ஆர் தயாரித்த திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். 1973 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். மிக பிரம்மாண்ட செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. மேலும் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த திரைப்படமும் இதுதான். இந்த படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து மஞ்சுளா சந்திரலேகா என பல முன்னணி நடிகைகள் நடித்திருந்தனர்.

நடிகை ஜெயலலிதாவிற்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுக்காததால் மிகப்பெரிய வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. எம்ஜிஆர் நடித்து வெளியான திரைப்படங்களிலேயே அதிக நாள் ஓடிய படமாக உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் புகழின் உச்சியை அடைந்தது. சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் 233 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி படமாக இந்த படம் அமைந்தது. மேலும் இந்த திரைப்படத்தை எம்ஜிஆர் இயக்கியிருந்தார்.

சிவாஜியின் சம்மதம் இல்லாமல் பாட்டு எழுத மாட்டேன் என அடம்பிடித்த கண்ணதாசன்!

நான்காவது எம்ஜிஆர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். 1978 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சராக பதவியேற்ற பின் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தை எம்ஜிஆர் தயாரித்து மற்றும் இயக்கியும் இருந்தார். எம்ஜிஆர் உடன் இணைந்து லதா நடித்திருந்தார். காலத்து படமாக இருந்ததால் இந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்று இருந்தது. மேலும் இந்த படத்தில் அமைந்த பாடல்களும் படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. எம் எஸ் விஸ்வநாதன் இசையில் எம்ஜிஆர் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த திரைப்படம் தான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.