நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க இருக்கும் படம் ஒன்றை வெற்றிமாறன் இயக்க உள்ளார் என்ற செய்தி தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்திற்காக ரூபாய் 2 கோடி மதிப்பில் வெளிநாட்டில் பிரம்மாண்டமான வீடு பங்களா ஒன்றின் செட் போடப்பட்டு வருவதாகவும் இந்த பங்களாவில் 150 அறையில் இருக்கும் இந்த படத்தின் 80 சதவீத காட்சிகள் இந்த பங்களா வீட்டில் தான் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த செட் அமைக்கும் பணி முடிந்ததும் ஏப்ரல் முதல் வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரே ஷெட்யூலில் கிட்டத்தட்ட படத்தை முழு படத்தையும் முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் ராஜ்கிரண் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
சூரியின் படத்தை முடித்ததும் வரும் ஜூன் முதல் வெற்றிமாறன், சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது