சமீபத்தில் வந்த பிகில் திரைப்படம் கால்பந்து விளையாடுபவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்து வருவதாக ரசிகர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
படத்தில் கால்பந்து விளையாடும் காட்சிகள் அதிகம் உண்டு அதை ஊக்கப்படுத்தும் காட்சிகளும் உண்டு. இப்படத்தில் நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும் ஒரு வீராங்கனையாக நடித்துள்ளார்.
இப்படம் உண்மையில் கால்பந்து விளையாடும் தேசிய அளவிலான வீராங்கனைகளையும் வசீகரித்துள்ளதாம்.
அகில இந்திய மகளிர் கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக தகுதி சுற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மதுரை காமராஜர் கல்லூரி மாணவிகள் 3ம் இடம் பிடித்து அதற்கு தகுதி பெற்றனர். இதன் பயிற்சியாளர் ரஞ்சிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது.
பிகில் படத்துக்கு பின் மாணவிகள் இது போல கால்பந்து விளையாட ஆர்வம் காட்டுவதாகவும் அப்படம் வந்த பின் பெற்றோர்களும் தங்கள் பெண் பிள்ளைகள் கால்பந்து விளையாட ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இதை தயாரிப்பாளர் தரப்பில் அர்ச்சனா கல்பாத்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.