கேங்ஸ்டர் படம் என்பது ஒரே வகையான குற்றங்களை செய்து வரும் கும்பல் பற்றிய கதை. ஹாலிவுட்டில் பல படங்கள் இப்படிப்பட்ட கதை அம்சங்களுடன் வந்து விட்டன. தமிழ்ப்படங்களிலும் இவ்வகையான கதை அம்சம் கொண்ட படங்கள் தற்போது வெற்றி நடைபோட்டு வருகின்றன.
அவற்றில் ஆரண்ய காண்டம், புதுப்பேட்டை, நாயகன், தளபதி, பாட்ஷா, தொட்டி ஜெயா, போக்கிரி, பகவதி போன்ற படங்களைச் சொல்லலாம். இவற்றில் பெரும்பாலானவை வெற்றி வாகையே சூடியுள்ளன. ஆனால் சில படங்கள் ஓடாமலும் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
ஜகமே தந்திரம்
சோழர் பரம்பரையில் வந்த ஒரு லண்டன் தாதா பற்றிய கதை. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் படத்தின் டிரெய்லரைப் பார்த்ததுமே எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. ஆனால் படத்தைப் பார்த்தால் பிளாப். படம் ஓடிடியில் தான் வெளியானது.
தனுஷ்க்கு இது 40வது படம். அவருடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைததுள்ளார். 2021ல் இந்தப் படம் வெளியானது.
மீகாமன்
மகிழ்திருமேனியின் இயக்கத்தில் 2014ல் வெளியானது. படத்தின் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி. எஸ.தமன் இசையில் பாடல்கள் சூப்பர். ஆர்யாவுக்கு செம சூப்பர் ஆக்டிங். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.
கேங்ஸ் ஆப் மெட்ராஸ்
2019ல் சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான படம். இப்படியும் ஒரு படம் வந்துச்சா என்று பார்ப்பவர்களை யோசிக்க வைக்கிறது. சாய் பிரியங்கா ருத், அசோக் குமார், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், பி.எல்.தேனப்பன், ஆடுகளம் நரேன், ராம்தாஸ், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஹரி டிபியுசா, ஷ்யாமழங்கன் ஆகியோர் சந்தோஷ் நாராயணன் மேற்பார்வையில் இசை அமைத்துள்ளனர்.