Bigg Boss 9 Tamil : நாக்கு கூசாதா.. FJ சொன்ன வார்த்தை.. குழந்தைகள் வர பாக்குறாங்க.. கண்ணீர் விட்டு கதறிய வியானா.. இனிமே கவனமா இருங்க..

FJ Controversy word In Bigg boss 9 tamil on Viyana : தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அதிக ஆதரவு பெறும் என எதிர்பார்த்த நேரத்தில் மிக…

FJ and Viyana

FJ Controversy word In Bigg boss 9 tamil on Viyana : தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அதிக ஆதரவு பெறும் என எதிர்பார்த்த நேரத்தில் மிக மிக கடுமையான விமர்சனங்களை தான் சந்தித்து வருகிறது. போட்டியாளர்களின் தேர்வு தொடங்கி அவர்கள் பிக் பாஸ் வீட்டில் மேற்கொண்டு வரும் அணுகுமுறையும் சுத்தமாக எடுபடாமல் போக, விளையாட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் ஒரு போட்டி மனப்பான்மை இல்லாமல் அனைவரும் வந்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு தான் அதிகமாக இருந்து வருகிறது.

திவாகர், பார்வதி, சபரி, விக்கல் சிக்ரம் என மிகக் குறுகிய போட்டியாளர்கள் சுற்றியே அதிக கன்டென்ட்கள் கிடைத்து வரும் நிலையில் எப்படித்தான் இந்த நிகழ்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி ரப்போகிறது என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு இருந்த வண்ணம் உள்ளது. சண்டைக்கும், சச்சரவுக்கு இடமில்லாமல் வேடிக்கையான சம்பவங்களும், அதே நேரத்தில் தேவையே இல்லாமல் தகாத வார்த்தைகளை பேசுவதுமாக தான் நிறைய சம்பவங்கள் நடந்து வருகிறது.

குழந்தைத்தனமான விஷயங்கள்

திவாகர் என்ன தான் நடிப்பு அரக்கன் என சொல்லி பிக் பாஸ் வீட்டில் நுழைந்தாலும் அவர் பேசும் சில விஷயங்கள் ஏற்புடைதாகவே தெரிகிறது. ஆனால், அவரை வேண்டுமென்றே குண்டா, உருண்டை என சொல்லி கம்ருதீன் பேசி வருவது பிக் பாஸ் வீட்டிற்கான ஒரு நெறியே அவருக்கு இல்லை என்பதை உறுதி செய்கிறது. இப்படி குழந்தைத்தனமாக பல விஷயங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி கொண்டிருக்க, சமீபத்தில் போட்டியாளர் FJ பேசிய விஷயமும் மீண்டும் ஒருமுறை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆபாசமான வார்த்தை

கம்ருதீன், வியானா, சுபிக்ஷா ஆகியோர் நடனமாடி கொண்டிருக்க அருகே அரோராவும் இருந்தார். அந்த சமயத்தில் அங்கே வந்த FJ, ‘ஜாலியா Strip Club ல் இருப்பது போல் உள்ளதுஎன சொல்ல, கமருதீனும்இருக்கட்டும்என ஒருவித ஆபாசமாக நடனமாடி சொல்கிறார். Strip Club என்பது வெளிநாடுகளில் மி ஆபாசமாக ஆடைகளை களைந்து நடனமாடுவது. குழந்தைகள் வரை பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு வார்த்தையை FJ சொன்னது கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணியது.
FJ Vs Viyana Issue

இதனிடையே, தான் நடனமாடி போது Strip Club என சொன்ன FJ வை கண்டித்த வியானா, “நீங்க Strip Club ன்னு சொன்ன வார்த்தை எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு. அப்படி நீங்க சொல்லலாமா?. ஒரு போஸ்ட் நான் இன்ஸ்டா போடவே என் வீட்ல 3 வருஷம் கஷ்டப்பட்டுருக்கேன். இப்ப முழுசா கவர் பண்ணி நான் ட்ரெஸ் பண்ணிருக்கேன். ஸ்லீவ்லெஸ் போட ஆரம்பிச்சதே ஒரு வருஷம் முன்னாடி தான். இப்போ தான் என் வீட்ல கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்க ஆரம்பிச்சுருக்காங்க..

மன்னிப்பு கேட்டா போதுமா?

அப்படி இருக்குறப்போ நீங்க சொன்னது வெளிய எப்படி பதிவாகி இருக்கும். ஏன்னா அந்த இடத்துல நான் இருந்தேன். இப்போ வேற பொண்ணுன்னாலும் எனக்கு கஷ்டமா இருக்கும். என் கண்ணுல கண்ணீரே வந்துடுச்சு. ஒருவேளை நான் தப்பாண்றேனோன்னு என் மனசுல ஓடிட்டே இருக்குஎன கண்ணீர் விடவும் செய்கிறார். இதற்கு மன்னிப்பு கேட்கும் FJ, இனிமேல் இப்படியான வார்த்தைகளை பேசமாட்டேன் என்கிறார். ஆனாலும், பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் ஒருமுறை பேசினாலும் கவனமாக அதை அவர் கையாள வேண்டும் என்பது தான் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.