பிக் பாஸ் வீட்டில் சமீபத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருந்தது FJ – ஆதிரை பற்றியது தான். பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் வாரத்திலேயே சிறப்பாக ஆடி பார்வையாளர்கள் ஆதரவை பெற்றவர் தான் அதிரை. ஆனால் FJ வுடன் இவர் சேர்ந்த பின்னர், அவரது ஆட்டத்தின் போக்கும் மாறி அவருடன் மட்டுமே இருக்கத் தொடங்கி விட்டார்.
அது மட்டுமில்லாமல், ஆதிரைக்கு வெளியே காதலன் இருந்தும் அவர் FJ வுடன் செய்தது தவறாக சித்தரிக்கப்பட, 3 வது வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் சூழலும் ஆதிரைக்கு உருவாகி இருந்தது. இதற்கு மத்தியில் கடந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளராக ஆதிரை உள்ளே நுழைந்தது அனைவருக்கும் சர்ப்ரைஸாக அமைந்திருந்தது.
FJ வுக்கு வந்த பயம்
ஆதிரை உள்ளே நுழைந்தது FJ வுக்கு வயிற்றில் புளியை கரைக்கும் வகையில் தான் அமைந்திருந்தது. இதற்கு காரணம் ஆதிரையுடன் நெருக்கமாக இருந்து விட்டு, கடைசியில் அனைத்து தப்பையும் ஆதிரை பக்கம் திருப்பியதுடன் மட்டுமில்லாமல், வியானாவுடனும் அதே போல நெருக்கமாக இருந்து ஆடியிருந்தார்.
இப்படி ஒரு சூழலில் தான் அதிரை வீட்டிற்குள் நுழைய இந்த நீதிமன்ற டாஸ்க் ஆரம்பமாகியிருந்தது. இதில் FJ மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்த ஆதிரை தன்னுடன் பழகியது பற்றியும் வியானாவுடன் பழகியது பற்றியும் பாய்ண்ட்களையும் அடுக்கியிருந்தார். இந்த வழக்கு விசாரிப்பில் நிச்சயம் தனது தனிப்பட்ட விஷயங்களை ஆதிரை பேசி விடுவார் என FJ பயந்திருந்தார்.
இதற்கு மத்தியில் தான் அரோரா முன்னிலையில், ஆதிரையும் FJ-வும் இது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தன்னை முத்தம் கொடுக்க சொன்னதாக ஆதிரை பற்றி FJ சொல்ல, ‘அவன்கிட்ட இந்த பாயிண்ட் மட்டும் தான் இருக்கு‘ என்கிறார். உடனே FJ-வும், ‘என் பாய் ஃப்ரெண்ட்க்கு தெரிஞ்சா பிரச்சனை இல்ல. அவன் ஓகே தான். ஆனா அவங்க வீட்ல தான் யோசிப்பாங்க அப்படின்னு ஆதிரை ஏன் சொல்லணும்?’ என அரோராவிடம் சொல்கிறார் FJ.
பருத்தி மூட்டை குடோன்லயே..
இதற்கு விளக்கம் கொடுக்கும் ஆதிரை, ‘என் லவ்வருக்கு இங்க நான் FJ வ லவ் பண்றேனா இல்லையான்னு புரிஞ்சுக்க முடியும். ஆனா, என் பாய் பிரெண்டோட அப்பா அம்மா பாக்குறப்போ என்னடா உள்ள போய் ஒரு பையன்கிட்ட இப்படி இருக்காளேன்னு தோணும். அதுக்காக தான் அப்படி சொன்னேன். அத விட்டுட்டு அவனை கழற்றி விட்டு உன்ன லவ் பண்ணுவேன்னு எல்லாம் சொல்லல. இது புரியுதா உனக்கு?’ என்கிறார்.
இதன் பின்னர் முதலில் தான் இருந்த போது FJ வுடன் நெருக்கமாக இருந்ததன் பெயர் காதல் இல்லை என்றும், அவர் அதை தவறாக புரிந்து கொண்டார் என்றும் ஆதிரை விளக்கம் கொடுக்கிறார். FJ வும் உன்னை பற்றி நான் பேசியது தவறாக இருக்கலாம் என்றும் இனிமேல் இப்படி நடக்காது என்றும் தெரிவிக்கிறார். இன்னும் சில விவாதங்கள் போய் கடைசியில் FJ ஆதிரையை சமரசம் செய்து விட்டதாகவே தெரிகிறது.

இருவரும் முன்பு போல நட்பானதாக தெரியும் நிலையில், இதை பார்க்கும் பார்வையாளர்கள் இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாமே என ஆதிரையின் வைல்டு கார்டு என்ட்ரியை விமர்சித்தும் வருகின்றனர்.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

