மட்ட சாங்குக்கு முதலில் தேர்வான நடிகை? ச்ச.. மிஸ் பண்ணிட்டீங்களே vp சார்..

கடந்த வாரம் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படமாக கோட் திரைப்படம் அமைந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் திரைப்படம் மிகப்பெரிய அளவில்…

trisha

கடந்த வாரம் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படமாக கோட் திரைப்படம் அமைந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 126 கோடிக்கு மேலாக வசூலை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

இது வழக்கமான வசூலை விட குறைவாக இருந்தாலும் தமிழ்நாட்டு ரசிகர்களின் நேர்மறையான விமர்சனத்தை பெற்று கோட் திரைப்படத்தை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். கிட்டத்தட்ட ஐந்து நாட்களில் 300 கோடி கிளப்பில் இணைந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு விஜயின் படத்தில் பல முன்னணி ஹீரோக்கள் நடித்திருக்கும் திரைப்படமாக இந்த கோட் திரைப்படம் வெளியாகி இருக்கிறது .ஒரு பக்கம் மோகன் ஒரு பக்கம் பிரபுதேவா இன்னொரு பக்கம் பிரசாந்த் என டாப் நடிகர்கள் நடித்து வெளியான ஒரு திரைப்படம் தான் கோட் .

அனைத்து ரசிகர்களையும் கவரும் விதமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது. எல்லா தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் படமாகவும் கோட் திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் திரிஷா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதை நாம் பார்த்திருப்போம் .

அந்த பாடல் பெரிய அளவில் ரீச் ஆகி இருக்கிறது. ஆனால் திரிஷாவுக்கு முன் அந்தப் பாடலுக்கு முதலில் நடிக்க இருந்த நடிகை யார் என்பதை பற்றி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகை ஸ்ரீ லீலா தான் முதலில் அந்தப் பாடலுக்கு நடனம் ஆட வேண்டி இருந்ததாம்.

sreeleela
sreeleela

ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் ஸ்ரீ லீலா விலக த்ரிஷா கமிட்டாகி இருக்கிறார். ஒரு வேளை ஸ்ரீ லீலா அந்த பாடலில் நடனமாடியிருந்தால் இன்னும் அந்த பாடலின் ஹைப் வேறு மாதிரி உயர்ந்திருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

குண்டூர்காரன் படத்தில் அவருடைய ஆட்டத்தை பார்த்த அனைவரும் தமிழுக்கு எப்போது வருவீர்கள் என அவரிடம் கேட்காத ரசிகர்களே இல்லை. அதே மாதிரியான ஒரு ஆட்டத்தை கோட் திரைப்படத்திலும் காட்டி இருந்தால் இன்னும் இந்த படத்தின் ஹைப் உயர்ந்திருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.