நாடக வாழ்க்கையை தொடர்ந்து எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த முதல் படம் என்ன தெரியுமா?

By Velmurugan

Published:

எம்ஜிஆரின் சினிமா பிரவேசத்திற்கு சென்னை பட்டினத்திற்கு வருவது அவசியமானது என்று உணர்ந்து சென்னைக்கு வந்தார் எம்ஜிஆர். வாழ்த்தாக் சாலை, ஒத்தவாடை தியேட்டரில் பதிபக்தி நாடகத்தில் நடித்தார் எம்ஜிஆர். குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாடகம் அது. இந்த நாடகத்தில் கதாநாயகனாக எம்ஜிஆர் பிரமாதமாக நடித்திருந்தார்.

அந்த நேரத்தில் பதிபக்தி நாடகத்தை சினிமாவாக தயாரிக்க ஒருவர் முற்பட்டார். நாடகத்தில் நன்கு நடித்ததால் தனக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினார் எம்ஜிஆர். ஆனால் நாடக நடிகர் வேண்டாம் ஏற்கனவே சினிமாவில் நடித்தவர்களை பயன்படுத்தி தான் படம் எடுக்க இருக்கிறோம் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளனர். எம்ஜிஆர் படம் வாய்ப்பு நழுவியதும் உடைந்து போனார்.

அதை தொடர்ந்து ஆனந்த விகடனில் தொடராக வந்த சதிலீலாவதியை படமாக எடுக்க ஆசைபட்டார் தயாரிப்பாளர் மருதாச்சலம் செட்டியார். வசனம் எழுதிவிட்டு நடிகர் எம். கே ராதாவின் தந்தையும், பாய்ஸ் நாடக கம்பெனியை நடித்தி வந்தவருமான கந்தசாமி முதலியாரை அணுகிய போது அவர் ஒரு நிபந்தனை வைத்துள்ளார்.

அதில் படத்தில் தனது நாடக கம்பெனி நடிகர்களுக்கு வாய்ப்பு தந்தால் தான் வசனம் எழுதுவதாக உறுதியாக கூறியுள்ளார். அந்த படத்தில் கந்தசாமி முதலியாரின் மகன் எம். கே ராதா ஹீரோவாக நடித்தார். மேலும் எம்ஜிஆர் மற்றும் டி.எஸ் பாலையாவிற்கு சிறிய கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளது. என்.எஸ் கிருஷ்ணனுக்கு காமெடி வேடம்.1936ல் சதிலீலாவதி திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சதிலீலாவதி படத்திற்கு பிறகு இரு சகோதரர்கள் படத்தில் ஒரு சிறு இடத்தில் நடித்த எம்ஜிஆர். அதன்பிறகு என்.எஸ் கிருஷ்ணன், எம். கே ராதா இருவரின் சிபாரிசில் அடுத்தடுத்து சில படங்களில் சிறு சிறு வேடங்கள் கிடைத்தது.

அந்த நேரத்தில் எம்ஜிஆரை மிகச்சிறந்த ஸ்டன்ட் நடிகராக வருவார் என்று எல்லோரும் கூறியுள்ளனர். அதற்கு எம்ஜிஆரின் உடல் அமைப்பு தான் முக்கிய காரணம். இது தவிர சண்டை சம்பந்தமான எல்லா வித்தைகளும் அவர் முறைப்படி கற்று தெரிந்து இருந்தார் என்பது இன்னொரு காரணம்.

1947 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜகுமாரி படத்தில் எம் ஜி ஆர் ஹீரோ ஆனார். அது ஒரு வெற்றிப்படம். அதன் பின் தொடர்ந்து வெற்றிதான் எம் ஜி ஆருக்கு. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ எம்ஜிஆர் என்ற அளவுக்கு உயர்ந்தார்.

எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் போதே அப்படி ஒரு பாடல் எழுதிய வாலி! சுவாரசியமான தகவல்கள்!

தயாரிப்பாளர்களில் தங்க சுரங்கம் என்று எம்ஜிஆர் நம்பப்பட்டார். அது உண்மை தான். ஒருவர் ஒரு துறையில் கால் பதிப்பது என்பது சுலபமான வேலை இல்லை. அதில் எம்.ஜி.ஆர் சற்று அழுத்தமாகவே பதிந்தார். சினிமாவில் வெற்றி நாயகனாக சாதனை படைத்தார். அந்த சாதனையை தக்க வைத்து கொள்வதிலும் அவர் கவனம் செலுத்த தவறவில்லை.

எம்ஜிஆர் சினிமாவில் இருக்கும் வரை அவர் தான் முதல் நிலை கதாநாயகன். மக்கள் திலகம், மக்களின் ஹீரோ போன்ற முதல் இடத்தை தொடர்ந்து அவர் தக்க வைத்தது மாயஜாலத்தால் இல்லை, அதன் பின்னர் அவரது கடுமையான உழைப்பு இருந்தது. எம் ஜி ஆர் இந்த முதலிடத்திற்கு தகுதியானவர் தான். தமிழ் சினிமா அவரை தாங்கியது அவரும் தமிழ் சினிமாவை தாங்கினார்.