106 நாட்களுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது நேற்று இனிதே இதன் பிரமாண்ட விருது வழங்கும் விழாவினைக் கொண்டாடியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பினாலேவிற்கு கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.
அவருக்கு கமல் ஹாசன் ஒரு வேலையைக் கொடுத்தார், அதாவது அவர் கையில் ஒரு எவிக்ஷன் கார்டைக் கொடுத்து உள்ளே சென்று அந்த கார்டில் உள்ள நபரை அழைத்து வர வேண்டும் என்று கூறினார். அதன்படி லோஸ்லியாவை வெளியில் அழைத்து சென்றார்.
அடுத்து உள்ளே இருந்த முகென், சாண்டி இருவரையும் பிக் பாஸ் வீட்டின் லைட்களை ஆப் செய்துவிட்டு வெளியே வருமாறு கமல் ஹாசன் கூறினார். அதன்படி அவர்கள் செய்துவிட்டு வந்தனர்.
வீட்டிற்கு வெளியே வந்ததும் கமல் ஹாசன் அவர்களை வரவேற்க, அடுத்து அவர் கையைப் பிடித்தவாறு சிறிது தூரம் நடந்துவந்தனர், அடுத்து கமல் ஹாசனோடு சாரட்டு வண்டியில் சாண்டி, மற்றும் முகென் டான்ஸ் ஆடியபடி வந்தனர். பெண்கள் போட்டியாளர்களுக்கு ஆரத்தி எடுத்தனர்.