“அம்மா பேயி”.. ஸ்ருதிஹாசனை கலாய்த்துத் தள்ளும் ரசிகர்கள்!!

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள்தான் ஸ்ருதி ஹாசன். தந்தை புகழ்பெற்ற நடிகராக இருந்தாலும், தனக்கான சினிமாப் பயணத்தை சிபாரிசு இல்லாமல் தானே அமைத்துக் கொண்டார் ஸ்ருதி ஹாசன். இவர் 6 வயதில் தேவர்…

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள்தான் ஸ்ருதி ஹாசன். தந்தை புகழ்பெற்ற நடிகராக இருந்தாலும், தனக்கான சினிமாப் பயணத்தை சிபாரிசு இல்லாமல் தானே அமைத்துக் கொண்டார் ஸ்ருதி ஹாசன்.

இவர் 6 வயதில் தேவர் மகன் படத்தில் போற்றி பாடடி பெண்ணே என்ற பாடலைப் பாடி குழந்தை நட்சத்திரமாகினார். இவர் முதல் முதலாக ஹீரோயினாக ஹே ராம் என்னும் இந்தி படத்தின் மூலமே அறிமுகமானார்.

fb82ac7a3e7e96a001bd1d029eda526f

2000 ஆம் ஆண்டில் சினிமாவில் கால் பதித்து இருந்தாலும், தமிழில் கால் பதிக்க இவருக்கு 11 ஆண்டுகள் ஆனது. 2011 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.

அதன்பின்னர் 3, பூஜை, புலி, வேதாளம் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இந்தியிலே அதிக அளவில் ஜொலித்த ஸ்ருதிஹாசன் படத்தினைவிட

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் உடற்பயிற்சி செய்தல், கொரோனா விழிப்புணர்வு, இசையமைத்தல், பாட்டுப் பாடுவது என ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

தற்போது 15 வருடங்கள் கழித்து காஃபி குடிப்பதாக கேப்ஷனாகப் போட்டு போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவில் அவர் ரியாக்ஷனைப் பார்த்த ரசிகர்கள் “அம்மா பேயி” என்று கலாய்த்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன