பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் நடிகை கஸ்தூரி. மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற இவர், 90 களில் மிகச் சிறப்பான பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதினை கொள்ளை கொண்டவர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தில் கமலுக்கு தங்கையாக நடித்து அசத்தி இருப்பார். அதன்பின்னர் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், அவர் சினிமாவில் இருந்து வெளியேறி பிசினஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பதுடன் நல்ல விஷயங்களுக்கு வரும் முதல் குரல் இவருடையதாகவே இருக்கும்.
பிக்பாஸ் வீட்டில் அவர் வனிதாவுடன் சண்டை போடுவார் என்று எதிர்பார்த்தநிலையில், பெரும்பாலும் சமாதானமாகவே போனார்.
நான் பேசினேன். எடிட்டிங்கில் கட் செய்துவிட்டார்கள் என்று பேட்டியும் அளித்திருந்தார்.
விஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாள் அன்று, அவர் சமாதிக்கு சென்றுவந்துள்ளார், மேலும் ஐயா அவர்களின் குடும்பத்தையும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பலரும் வாழ்த்திவந்த நிலையில், தற்போது இவர் நடத்தும் ஆசிரமத்தில் இவர் பிறந்தநாளுக்காக சிறு விழாவினை நடத்தி, ஏழைக் குழந்தைகளுக்கு உதவிகள் செய்துள்ளார்.