தெலுங்கைவிட தமிழில்தான் நெறைய படம் நடிச்சிருக்கீங்க… தமன்னாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

தமன்னா  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் 2005 ஆம் ஆண்டு அறிமுகமானாலும், இவருக்கு தென்னிந்தியாவில் வாய்ப்பானது தெலுங்கு சினிமாவிலேயே கிடைக்கப் பெற்றது. இவர்…

தமன்னா  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் 2005 ஆம் ஆண்டு அறிமுகமானாலும், இவருக்கு தென்னிந்தியாவில் வாய்ப்பானது தெலுங்கு சினிமாவிலேயே கிடைக்கப் பெற்றது.

இவர் தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானாலும், அவர் ஓரளவு பிரபலமானது கல்லூரி திரைப்படத்தில்தான். அதன்பின்னர் இவர் வியாபாரி, இன்று நேற்று நாளை, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

கேடி படத்தில் நடிப்பதற்கு முன்னர் இவர் சீறி என்னும் தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமானார்.

2005 ஆம் ஆண்டு தனது சினிமாப் பயணத்தினைத் துவக்கிய தமன்னா, தற்போது 15 ஆண்டுகள் ஆகியும் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார்.

c570ad9ed3cbb838504900185152119f

கொரோனா பாதிப்பால் சினிமா உட்பட பல தொழில்கள் நடைபெறவில்லை, இதனால் சினிமாத் துறையில் உள்ள நலிந்த கலைஞர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு திரையுலகத்தினர் தங்களால் இயன்ற பொருள் உதவியினை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் ரூ.3 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொடுத்து உதவி செய்துள்ளார். ஆனால் இவர் தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு பண உதவி செய்யவில்லை.

இதனால் தமிழ் சினிமா தொழிலாளர்கள் மிகப் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

தெலுங்கில் அறிமுகமாகி இருந்தாலும், இவர் அதிக அளவில் தமிழ்ப் படங்களிலேயே நடித்துள்ளார் என்பதால் ரசிகர்கள் படும் கோபத்தில் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன