எம்ஜிஆர் அதிரடியாக நடிப்பவர் . சிவாஜி கணேசன் வெவ்வேறு கோணங்களில் நடிப்பவர். ஜெமினி கணேசன் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பவர். 1960 1970 காலகட்டங்களில் சினிமா துறையில் இந்த மூவரும் தான் முன்னணி நடிகர்களாக இருந்தனர். இந்த நிலையில் 1966 ஆம் வருடம் எம்ஜிஆர் மற்றும் ஜெமினி கணேசன் இணைந்து நடித்த படம் ஒன்று வெளியானது. அந்த படத்தில் ராமு சோமு என்ற கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் ஜெமினி கணேசன் நடித்தார்கள்.
படத்தில் ராமு சோமு சிறுவர்களாக இருந்த சமயத்தில் அவரது தாயை வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நம்பியார் அவர்கள் கொன்று விடுகிறார். இதனால் தாயைக் கொன்றவனை அடையாளம் பார்த்து வைத்துவிட்டு அவரை என்றாவது ஒருநாள் கொன்றே தீர வேண்டும் என்ற வெறியோடு அண்ணன் சோமு வளர்கிறார் ராமு வளர்ந்து ஒரு போலீஸ் அதிகாரியாக மாறிவிட கதாநாயகியான ஜெயலலிதா மீது காதல் கொள்கிறார். ஆனால் அதன் பிறகு சோமுவின் மூலமாக ஜெயலலிதாவின் தந்தை தான் நம்பியார் என்றும் அவர்தான் தனது தாயைக் கொன்றார் என்றும் தெரிந்து கொள்கிறார்.
சோமு தாயை கொன்றவரை கொலை செய்ய வேண்டும் என்று துடிக்கிறார் ஆனால் ராமு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். இவ்வாறாக சகோதரர்களிடையே ஏற்படும் போட்டியில் கடைசியில் ராமு வென்று சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதோடு படம் முடிவடைகிறது. இதில் அண்ணன் சோமு கதாபாத்திரத்தில் ஜெமினி கணேசன் தம்பி ராமு கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தனர்.
இரண்டு முன்னணி நடிகர்கள் நடித்த இந்தப் படத்தின் பெயர் முகராசி. 1966 ஆம் ஆண்டு வெளியான இந்த முகராசி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. எம்ஜிஆர் தனியாக நடித்த படமாக இருந்தாலும் சரி ஜெமினி கணேசன் தனியாக நடித்த படமாக இருந்தாலும் சரி நிச்சயம் வெற்றியை பெரும். ஆனால் இவர்கள் இணைந்து நடித்த இந்த படம் வெற்றியை பெறாதது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் இதுதான் ஜெமினி கணேசன் எம்ஜிஆர் இணைந்து நடித்த ஒரே படம் என்பது குறிப்பிடத்தக்கது.