மலையாள முன்னணி நடிகரான ஃபஹத் பாசில், தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை மலையாள பட தயாரிப்பாளர் ஆவார். தனது 20 ஆவது வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்து விட்டார். 2002 ஆம் ஆண்டு தனது தந்தை தயாரிப்பில் வெளியான ‘கையேதும் தூரத்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் வில்லன் ரோலில் நடித்தார். அதைத் தொடர்ந்து ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘விக்ரம்’, ‘மாமன்னன’ போன்ற திரைப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்து தமிழ்நாடு ரசிகர்களையும் பெற்றார்.
தனது நடிப்புத் திறமையால் நான்கு கேரளா மாநில சிறந்த நடிகருக்கான விருதுகளையும், மூன்று பிலிம்பேர் விருதுகளையும் வென்றார். இவர் எஸ்பிரஸின் குயின் என்று அழைக்கப்படும் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த ‘மாமன்னன்’ திரைப்படத்தில் வில்லன் ரோலில் நடித்த ஃபஹத் பாசில் அவர்களுக்கு இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. இவரது நடிப்பிற்காக நல்ல விமர்சனங்களைப் பெற்றார்.
இந்நிலையில் தற்போது தனது ரசிகர்களுக்காக ஃபஹத் பாசில் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், என்னை தியேட்டரில் திரையில் மட்டும் என்னை ரசியுங்கள், நீங்கள் வீட்டில் இருக்கும் போதும், சாப்பிடும் போதும் என்னை பற்றியோ நான் நடித்ததைப் பற்றியோ பேச வேண்டாம். சினிமாவை தாண்டி வாழ்க்கையில் செய்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் என்ன மனுசன்யா என்று புகழ்ந்து வருகின்றனர்.