சின்ன பசங்க கூட ஹாய் செல்லம் வசனத்தை கொண்டாடுறாங்க… பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி…

By Meena

Published:

பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர். இவர் நடிகர் மட்டுமல்லாது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். பல குணச்சித்திர கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர்.

கில்லி படத்தில் இவரது நடிப்பு அனைவரின் பாராட்டைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் தயாரித்து நடித்த ‘அபியும் நானும்’ திரைப்படம் பிரகாஷ்ராஜ் அவர்களின் அபாரமான எமோஷனலான நடிப்பை வெளிக்காட்டியது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றி வரும் பிரகாஷ்ராஜ் அவர்கள் ஐந்து தேசிய திரைப்பட விருதுகள் , எட்டு நந்தி விருதுகள் , எட்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் , ஐந்து பிலிம்பேர் விருதுகள், தென்னக விருதுகள், நான்கு SIIMA உட்பட பல விருதுகளைப் வென்றவர்.

இந்நிலையில், தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட பிரகாஷ்ராஜ் அவர்களிடம் கில்லி திரைப்படம் ரீ- ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது, அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

அவர் கூறியது என்னவென்றால், நான் பேசிய வசனம் இவ்வளவு பிரபலமாகும் என்று நினைக்கவில்லை. முதலில் ரிலீஸ் ஆகும் போது பிறந்திருக்காத 17, 18 வயது பசங்க இன்னிக்கு ரீ- ரிலீஸ் பாத்துட்டு ஹாய் செல்லம் வசனத்தை கொண்டாடுறாங்க. மக்களின் ஆதரவையும் அன்பையும் பார்க்கும் போது அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை. 20 வருடங்கள் கழித்து இந்த அளவிற்கு படம் வெற்றியடைந்தது ரொம்ப சந்தோசம் என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் பிரகாஷ்ராஜ்.