சூரி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் பின்னணியில் கூட்டத்தோடு கூட்டமாக நடிக்க ஆரம்பித்த சூரி இன்று பலரும் பாராட்டப்படும் நடிகராக இருக்கிறார். மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் 1997 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து சினிமாவில் பின்னணியில் நடித்துக் கொண்டிருந்தார். தனது வயிற்று பிழைப்புக்காக சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். அவ்வப்போது நாடகங்களிலும் நடித்து வந்தார் சூரி.
2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் நடித்து அந்த காட்சி பிரபலமானதால் பரோட்டா சூரி என்று பலராலும் அழைக்கப்பட்டார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து நான் மகான் அல்ல, களவாணி, வேலாயுதம், வாகை சூடவா, மனம் கொத்தி பறவை, சுந்தரபாண்டியன் போன்ற பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நாயகனுக்கு நண்பனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் தனது எதார்த்தமான நகைச்சுவையை வெளிப்படுத்தி பிரபலமானார் சூரி.
நகைச்சுவை நடிகராக இருந்த சூரியை வெற்றிமாறன் தனது விடுதலை படத்தின் மூலம் நாயனாக அறிமுகம் செய்தார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களில் வந்து அவருக்கு பேரும் புகழையும் பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்தார் சூரி. அவையெல்லாம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறவே தொடர்ந்து பல திரைப்படங்களில் நாயகனாக கமிட் ஆகி பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சூரி. இவர் நடித்த மாமன் திரைப்படம் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த மாமன் திரைப்பட நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு சூரியை பற்றி பெருமையாக பேசி இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் ஈரோடு மகேஷ். ஈரோடு மகேஷ் கூறியது என்னவென்றால், சூரி இன்றும் ரோட்டில் ப்மவ் காரில் செல்லும்போது பெரிய பெரிய கட்டிடங்கள் வரும்போது கால் மேல் கால் போட்டிருந்தால் அதை இறக்கிவிட்டு விடுவார். அதற்கு காரணம் அவர் கூறுவது என்னவென்றால், நான் ஒரு காலத்தில் இந்த கட்டிட வேலை செய்துதான் சாப்பிட்டு வந்தேன். இன்று நான் பிஎம்டபிள்யூ காரில் போகலாம் ஆனால் அந்த கட்டிடங்கள் தான் என்னை வாழ வைத்தது அதற்கு மரியாதை செலுத்தும் விதமாகத்தான் காரில் செல்லும் போது அந்த கட்டிடங்களை தாண்டும் போது கால் மேல் கால் போட்டிருந்தால் இறக்கி வைத்து விடுவேன் என்று கூறுகிறார். அப்படிப்பட்ட ஒரு மாமனிதர் தான் சூரி என்று புகழ்ந்து பேசி இருக்கிறார் ஈரோடு மகேஷ்.
