தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’: ஒரு முன்னோட்டம்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல…


732cc9366de4142700282f829b1c7ade-1

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்டு கொண்டிருந்தது

இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் அவர்களின் பொருளாதார சிக்கல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருந்ததாக கூறப்பட்டடு. இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் அவர்கள் இந்த படத்திற்கான பொருளாதார சிக்கல் அனைத்தையும் தீர்த்து தற்போது வெளியிடுகிறார். எனவே இந்த படம் நாளை வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

fc50075bd05913d521a3849d484d21d3-2

தனுசுக்கு ஏற்கனவே ’அசுரன்’ உள்பட ஒரு சில வெற்றிப் படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து உள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் நாயகியான மேகா ஆகாஷ் இந்த படத்தைதான் மிகப்பெரிய அளவில் நம்பிக் கொண்டிருக்கிறார். பேட்ட, வந்தா ராஜாவாத்தான் வருவேன், பூமராங் ஆகிய படங்களில் மேகா ஆகாஷ் நடித்திருந்தாலும் இந்தப் படத்தின் வெற்றி அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கௌதம் மேனன் கடந்த சில ஆண்டுகளாக இயக்கிய சில படங்கள் அனைத்துமே சிக்கலில் உள்ளதால் இந்த படம் நல்லபடியாக வெளியே வந்தால் இதனை தொடர்ந்து அவருடைய மற்ற படங்களும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
மொத்தத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதாகவும், நாளை இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன