சூர்யாவின் படத்தில் இணைய போகும் முக்கிய சினிமா பிரபலம்! அப்போ கண்டிப்பா படம் தாறுமாறுதான்!

By Velmurugan

Published:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சூரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இப்படத்தின் அதே காம்போ மற்றொரு படத்திற்காக மீண்டும் இணைகிறது என்ற செய்தி வெளியாகி உள்ளது.

சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் இப்படம் ‘சூர்யா 43’ என்று தற்போது அழைக்கப்படுகிறது. இந்த படத்திற்கு இன்னமும் பெயரிடப்படவில்லை. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷிற்கு 100 வது படம் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். மேலும் இப்படத்தில் கேரளா குட்டி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் துல்கர் சல்மான் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

பல்வேறு மொழிகளில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் துல்கர் சல்மான், ‘சூர்யா 43’ படத்தில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் இப்படத்தில் அவர் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் துல்கரின் வேடத்தில் கார்த்தியை நடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

சூர்யா 43 படத்தின் படப்பிடிப்பு 2023 டிசம்பரில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. சூர்யா தனது தற்போதைய பிரம்மாண்ட படமான ‘கங்குவா’ படத்தை நவம்பர் மாதத்திற்குள் முடித்துவிடுவார் என்றும், சூர்யா 43 படப்பிடிப்பிற்கு முன் ஒரு சிறிய இடைவெளி எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், தேசிய விருது பெற்ற ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கான வேலைகளை சுதா கொங்கரா பார்த்து வருகிறார். அக்‌ஷய் குமார் மற்றும் ராதிகா மதன் நடித்த ரீமேக் பிப்ரவரி 16, 2024 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் தனது வேலைகளை முடித்து விட்டு ‘சூர்யா 43’ படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதா கொங்கராவின் சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் இடையே இந்த படத்திற்கும் மிக பெரிய வரவேற்பு இருக்கும் என தெரிகிறது.

மேலும் உங்களுக்காக...