கிராமத்து திருவிழாக்களில் கூத்து எனப்படும் சத்தியவான் சாவித்ரி, வள்ளி திருமண நாடகங்கள் நடைபெறும் இடையில் நிகழ்ச்சி ஃபோர் அடிக்க கூடாது என பஃபூன் என ஒருவர் வந்து பேசுவார். இன்னொரு பெண்ணும் பேசுவார் பேசிக்கொள்வது இரட்டை அர்த்த வசனங்கள்தான் ரசிக்கும்படி பேசி மக்களை கவர்ந்திழுப்பார்கள்.
இப்படியாக இரட்டை அர்த்த வசனங்களை விடிய விடிய நிகழ்ச்சியின் இடை இடையே பேசுவார்கள் பலரும் அதை கை தட்டி ரசிப்பார்கள்.
இந்த இரட்டை அர்த்த வசனங்களை சினிமா காமெடியில் கொண்டு வந்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி, இவரின் படங்களில் சில கெட்ட சமாச்சாரங்களை தொண்டை வரை கொண்டு வந்து விடுவார் நாம் குடும்பத்தோடு இருக்கிறோமே ஏதாவது தவறா பேசிடுவாரோ என பயப்பட வைத்து கொண்டிருக்கையில் வார்த்தையை மாற்றி விடுவார்.
இது போல நடிகர் விவேக்கின் காமெடிகளிலும் மிக மோசமான வார்த்தைகளை கூட மிக பக்கத்தில் கொண்டு வந்து கண நேரத்தில் வேறு மாதிரி மாற்றி விடுவார்.
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய ஹர ஹர மகாதேவகி உள்ளிட்ட சமீப கால படங்கள், எஸ்.ஜே சூர்யாவின் நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களில் எல்லாம் அதிர்ச்சியளிக்கும் கெட்ட வார்த்தைகளை ஓப்பனாக பேசிவிடுவார்களோ என்று பயந்து கொண்டிருக்கையில் அப்படியே தலை கீழாக மாற்றி விடுவார்.
சந்தானம் படங்களிலும் இரட்டை அர்த்த வசனங்கள் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்டோர் நடித்த படங்களில் கூட இது போல டபுள் மீனிங் டயலாக்ஸ் இருக்காது ஏதாவது சொல்லணும்னா கவுண்டமணி நறுக்கு தெறித்தாற்போல் நேரடியாக சொல்லிவிட்டு போய் விடுவார்.
இது போல இரட்டை அர்த்த வசன காட்சிகள் படங்களை தனியாக போய் பார்க்கும் இளைஞர்கள், ஆண்கள், பலர் முகத்தை சுழிக்காமல் ரசித்து பார்த்து விட்டு வருவர். ஆனால் குடும்பமாக போய் பார்ப்பது மிகவும் கடினம்.
தாவணிக்கனவுகள் படத்தில் படத்தில் வரும் தவறான காட்சிகளை தன் தங்கைகளுடன் பார்க்க முடியாத பாக்யராஜ் காசை கீழே போட்டு தேட சொல்வார். அது போல நிலைதான் இது போல காமெடிகளை பார்க்கும் குடும்பம் குழந்தைகளுடன் சென்று படம் பார்க்கும் ஆண்கள் நிலையும்.