தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக இருப்பவர் அமலாபால், சினிமாவில் இருந்து விலகி இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டநிலையில், 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதுடன் மீண்டும் சினிமாக்களில் தலைகாட்டி வருகிறார். இவர் மார்ச் மாதம் மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் எனப் பதிவிட்டு வைரலாகி வருகிறார். இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
அதாவது, “கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவக்கூடாது என்பதற்காகவே இந்த ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் மற்றவர்களைப் பார்த்து ஊரடங்கில் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று மன அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள்.
அப்படி நீங்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை எனில் வருத்தம் கொள்ளத் தேவையில்லை. அனைத்து நேரங்களிலும் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வாழ்க்கையினை இழந்துவிடக் கூடாது. நீங்கள் வேறு ஏதாவது வழியில் பொழுதினைக் கழித்து இருந்தாலும், அது உங்களுக்குப்பிடித்த விஷயம் எனில் அது சிறப்பான விஷயமாகவே கருத வேண்டும்.
மற்றவர்களுடன் ஒப்பிட்டு, ஓடி, மன அழுத்தங்களுக்கு ஆளாவதைத் தவிர்த்தல் நல்லது” என்று கூறியுள்ளார்.