ஆறு மாதங்கள் நடக்கவே கூடாதுனு டாக்டர் சொன்னார்… 48 நாளில் எழுந்து நடிக்க வந்தேன்… வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த பிரவீன் ஆதித்யா பேச்சு…

By Meena

Published:

2014 ஆம் ஆண்டு வெளியான ‘அப்புச்சி கிராமம்’ திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகனவர் பிரவின் ஆதித்யா. இந்த படத்தில் வரும் ‘என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி’ என்ற பாடல் மெகாஹிட் ஆகி இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது. அந்த பாட்டின் வாயிலாக அதிகமாக அறியப்பட்டார் பிரவீன் ஆதித்யா.

பின்னர் நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சின்னத்திரையில் வாய்ப்புக் கிடைக்கவே வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை விஜய் டிவியில் ‘சக்திவேல்’ என்ற தொடரில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த தொடர் தற்போது டிஆர்பி நம்பர் ஒன்றில் உள்ளது.

‘சக்திவேல்’ தொடர் தொடங்கி நான்கு மாதங்களே ஆன நிலையில் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றித் தொடராக ஓடிக்கொண்டிருக்கிறது. அதை கொண்டாடும் விதமாக பிரவீன் ஆதித்யா பல நேர்காணல்களை கொடுத்து வருகிறார். அதில் ‘சக்திவேல்’ தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்ததை பற்றியும் சமீப காலத்தில் அனுபவித்த வலிகளையும் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது என்னவென்றால், சமீபத்தில் நடத்த ஒரு விபத்தினால் எனது இரண்டு காலில் உள்ள எலும்புகள் முறிந்துவிட்டன. இரண்டு கால்களிலும் மேஜர் அறுவை சிகிச்சை செய்து ஸ்க்ரூ போட்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் ரொம்பவே நொறுங்கி போயிட்டேன். அப்போதான் விஜய் டிவியில் இருந்து என்னை அழைத்து சக்திவேல் தொடரில் நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். அந்த கதைக்கு நீங்க பொருத்தமா இருப்பிங்கனு சொன்னாங்க.

அப்போ நான் டாக்டரிடம் ஆலோசனை கேட்டேன். அவங்க ஆறு மாசம் ஆகாம நீங்க வேலை பார்க்கமுடியாது நடக்க கூடாதுனு சொன்னங்க. ஆனால் என்னோட உள்மனசு என்னை சும்மா இருக்க விடல எப்படியாவது இந்த தொடரை பண்ணிடனும்னு நினைச்சேன், என்னை நானே உத்வேக படுத்திகொண்டு விபத்து நடந்து ஆபரேஷன் முடிந்த 48 வது நாளில் கையில் ஸ்டிக் வைத்துக் கொண்டு சக்திவேல் தொடரில் நடிக்க சென்று விட்டேன். அவ்ளோ வலியை அனுபவிச்சிருக்கேன். இப்போ இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் போது அந்த வலியெல்லாம் பரவாயில்லைனு தோணுது என்று பேசியுள்ளார் பிரவீன் ஆதித்யா.