தீபாவளி வெற்றிப்படங்கள் – யாரும் எதிர்பாராமல் எகிறிய வானவில்

கடந்த 2000ம் ஆண்டு வந்த படங்களில் தீபாவளிக்கு விஜய்யின் பிரியமானவளே, கமலின் தெனாலி, அர்ஜூன் நடித்த வானவில் படங்கள் ரிலீஸ் ஆனது. கமலின் வித்தியாசமான நடிப்புக்காக தெனாலி அதிகம் ரசிக்கப்பட்டது. இது கே.எஸ் ரவிக்குமாரின்…

கடந்த 2000ம் ஆண்டு வந்த படங்களில் தீபாவளிக்கு விஜய்யின் பிரியமானவளே, கமலின் தெனாலி, அர்ஜூன் நடித்த வானவில் படங்கள் ரிலீஸ் ஆனது.

bd5e6d98b51d7c2d3e8558447bd066b5

கமலின் வித்தியாசமான நடிப்புக்காக தெனாலி அதிகம் ரசிக்கப்பட்டது. இது கே.எஸ் ரவிக்குமாரின் சொந்தப்படம், பெரிய புராஜெக்ட், ரஹ்மான் இசை கமலின் ஸ்டார் வேல்யூ உள்ளிட்டவைகளால் இப்படம் எதிர்பார்க்கப்பட்டது.

விஜய்க்கும் ரசிகர்கள் பெருகி வந்திருந்த நேரம் அவரின் பிரியமானவளே படமும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த இரண்டு படங்களும் நல்ல படங்கள் தான். ஆனால் இதில் உள்ள மைனஸ் என்னவென்றால் தீபாவளிக்கு ஏற்ற படங்கள் இதுவல்ல , விஜய் நடித்த பிரியமானவளே மிக மென்மையான கதை, தெனாலி கமலே நடித்திருந்தாலும் வித்தியாசமான நகைச்சுவைப்படம்.

பொதுவாக தீபாவளி பண்டிகை போன்ற பண்டிகை கொண்டாட்ட மனநிலையில் படம் பார்க்க செல்வோர் வெறித்தனமாக ஒரு ஆக்சன் படம் பார்த்து விட வேண்டும் என்று செல்வார்கள் அப்படி சென்றவர்களுக்கான விஷயத்தை கமலும், விஜயும் பூர்த்தி செய்யவில்லை சத்தமில்லாமல் பூர்த்தி செய்து சாதித்த படம்தான் வானவில். ஆரம்பத்தில் தெனாலி, பிரியமானவளே படங்களுக்கு இருந்த மாஸில் இப்படம் அதிகம் ரசிகர்களுக்கு தெரியவில்லை. பிறகு சேது படம் லேட்டாக ஹிட் ஆனது போல் மீடியா, விளம்பரங்கள், விமர்சனங்கள் மூலம் இப்படம் தான் தீபாவளி டாப் என தெரிய வந்தது.

ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கு செல்லும் ஏழை மாணவன் அர்ஜூன், அவருடன் அழகிய காதலியாக டிரெயினில் அபிராமி, காஸ்ட்லியான நபராக பணக்கார பழக்க வழக்கங்களுடன் பிரகாஷ்ராஜ். முதலில் அவர் டிரெயின் டிக்கெட்டை தவற விட்டு வரும் ஓபனிங் காட்சியே அவரின் வித்தியாசமான கதாபாத்திரத்தை உறுதி செய்தது.

நல்லவன் போல ட்ரெய்ன் மெட்டாக ஐ,ஏ.எஸ் ட்ரெய்னிங் மெட்டாக வரும் பிரகாஷ்ராஜ் அர்ஜூன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில் தவறான விசயங்களை கையில் எடுப்பது அர்ஜூனை கொடுமை செய்வது அதற்கு அர்ஜூன் கொடுக்கும் அதிரடி பதிலடிகளும்தான் மீதிக்கதை.

இப்படத்தையும் படத்தின் திரைக்கதையையும் மிக அழகாக இயக்கி இருந்தார் இயக்குனர் மனோஜ்குமார். அந்த வருட தீபாவளிக்கு பெரிய படங்களுக்கு இடையில் வந்து பெரிய அளவில் சாதித்த படம்தான் இந்த படம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன