பிக் பாஸ் வீட்டிற்குள் நடிப்பு அரக்கன் என்ற பெயருடன் முதல் போட்டியாளராக நுழைந்தவர் தான் திவாகர். ஆனால் அவரது செயல்பாடுகள் நாளுக்கு நாள் மிக மிக மோசமான பாதையில் சென்று கொண்டிருக்க இனிவரும் நாளில் நிச்சயம் நிறைய எச்சரிக்கைகளை சந்திக்க வேண்டும் என்று தான் தெரிகிறது. அந்த வகையில் பார்வதியிடம் அவர் செய்த ஒரு முக்கியமான பிரச்சனை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.
சமூக வலைத்தளங்களில் நடிப்பது போல வீடியோக்களை பதிவிட்டு அது மிக காமெடியாக இருந்தாலும் தன்னை நடிப்பு அரக்கனாக பெருமைப்பட்டு வைரலானவர் தான் திவாகர். வாட்டர் மெலான் ஸ்டார் எனப்படும் இவர், இந்த பிரபலத்தின் மூலமே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்தார்.
என்னய்யா உள்ள பண்றே..
பிக் பாஸ் வீட்டின் ஒவ்வொரு போட்டியாளர்களின் செயல்பாடும் மிக மோசமாக சென்று கொண்டிருக்க அவ்வப்போது திவாகர் உள்ளிட்ட ஒரு சில பேர் தான் வேடிக்கையாக ஏதாவது விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் திவாகருக்கு எதிர்ப்பு குரல் இருந்தாலும் அவர் கன்டென்ட் நிறைய கொடுப்பதால் இன்னும் கொஞ்ச நாள் அவர் தொடரட்டும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அதே வேளையில் சமீபத்தில் அவர் சில விஷயங்களில் எல்லை மீறுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பிக் பாஸ் வீட்டிற்கு வந்த உடனே அரோராவுடன் கொஞ்சுவது, கெஞ்சுவது என இருந்தார் திவாகர். ஆனால் அதே வேளையில் அவர் பார்வதியுடன் மிக நெருக்கமாக தங்கை ஸ்தானத்தில் அவரை பார்த்து அனைத்து விஷயங்களும் பகிர்ந்து கொள்ளும் நபராக இருந்து வந்தார்.
நானே உன்ன கல்யாணம் பண்ணா..
இதற்கு மத்தியில் கடந்த சில தினங்களாக பார்வதியிடம் அவரது செயல்பாடு மிக மோசமடைய தொடங்கியுள்ளது. ஒரு முறை கல்யாணம் செய்து கொள்ளலாமா என பார்வதியிடம் வேடிக்கையாக திவாகர் கேட்டார். இதே போல அனுமதி இல்லாமல் பார்வதி மீது திவாகர் கையை வைக்க, பார்வதிக்கும் கோபம் அதிகமாக வந்தது. பார்வதி ஒரு சில முறை எச்சரித்தும் இதை நிறுத்தாத திவாகர், மீண்டும் ஒருமுறை சீரியசாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் “ஒரு உதாரணத்திற்கு நானே உன்னை திருமணம் செய்கிறேன் என்று வைத்துக் கொள்” என்றும் கூறுகிறார்.

இதுவும் பார்வதிக்கு பிடிக்காமல் போக அவரது முகச்சுளிப்பை காரணம் காட்டியும் நிறுத்தாத திவாகர் தொடர்ந்து Flying Kiss கொடுப்பதும் அதே வேளையில் டார்லிங் என்று அழைப்பதுமாக இருக்க, பார்வதி இன்னும் எரிச்சல் அடைகிறார். “வாயை மூடுங்க.. அண்ணா அடிச்சிடுவேன்” என்று எச்சரித்தும் திவாகர் கேட்பதாக இல்லை.
ஒரு வேளை பார்வதி இதை பெரிய பிரச்சனையாக எடுத்து பிக் பாஸிடம் முறையிட்டால் நிச்சயம் திவாகருக்கு கடுமையான எச்சரிக்கை கிடைக்கலாம் என தெரிகிறது. அண்ணா என பார்வதி அமைதியாக இருப்பதே திவாகருக்கும் வசதியாக போய் விட்டதாக தெரிகிறது. அவராக இதை திருத்தி கொண்டு பிக் பாஸ் வீட்டில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

