அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அஜீத்-க்கு அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையான படங்கள் இரண்டு. ஒன்று காதல் கோட்டை மற்றொன்று ஆசை. இதில் ஆசை படத்தினை இயக்குநர் வஸந்த் இயக்கியிருந்தார். கேளடி கண்மணி, நீ பாதி நான் பாதி ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் இந்தப் படத்தினை இயக்கியிருந்தார் வஸந்த். 1995-ல் வெளியான இப்படம் அஜீத்தின் மார்க்கெட்டை உயர்த்தியது. ஆசை படத்தின் மூலமாகத்தான் அஜீத்துக்கு ஆசை நாயகன் என்ற பட்டமே வந்தது.
மேலும் அப்போது பெண்கள் பலர் அர்விந்த் சாமியின் ரசிகைகளாக இருந்தனர். இயக்குநர் வஸந்த் இவ்வாறு அர்விந்த் சாமி போல் ஸ்மார்ட்டான, கலரான ஒரு நடிகர் வேண்டும் என்பதால் அப்போது வேஷ்டி விளம்பரம் ஒன்றில் நடித்திருந்த அஜீத்தை தேர்வு செய்தார். மேலும் அஜீத் அப்போது ஒல்லியாக இருந்திருக்கிறார்.
அப்போது அஜீத்துக்கு அவர் பல வகைகளில் இண்டர்வியூ வைத்திருக்கிறார். ஏனென்றால் அவரின் சினிமா ஆர்வம் நிலையானதா அல்லது புகழுக்காக நடிக்கிறாரா என்று தெரிந்து கொள்ளத்தான். ஒருவழியாக அஜீத் ஆசை படத்தில் கமிட் ஆனதும் அவருக்காகவே பெண்கள் விரும்பும் வண்ணம் சில காட்சிகளை எடுத்திருக்கிறார்.
கை கொடுத்த விளையாட்டு..கபடி முதல் கிரிக்கெட் வரை ஹிட் கொடுத்த ஹிட் கொடுத்த விஷ்ணுவிஷால்
அதில் ஒன்று தான் ஓப்பனிங் காட்சியில் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் சிறுமிகள் அஜீத்தைப் பார்த்து, “நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்பது போல் அமைந்திருக்கும். ஏன் என்று அஜீத் கேட்க, நீ சிகப்பா, அழகா இருக்க“ என்று அக்குழந்தைகள் சொல்வது போல் அக்காட்சி அமைந்திருக்கும். மேலும் அஜீத், பிரகாஷ்ராஜ், சுவலட்சுமி காம்பினேஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருந்தார்.
இவ்வாறு இயக்குநர் வஸந்த் செதுக்கிய படம் தான் ஆசை. அவர்நினைத்தது போலவே அஜீத்துக்கு எதிர்பார்த்த புகழ் கிடைத்தது. அதுவரை வெறும் அஜீத்தாக இருந்தவர். ஆசை நாயகனாக, பெண்களின் மனதினைக் கொள்ளை கொண்ட நாயகனாக உருவெடுத்தார். ஆசை படம் ஹிட் அவரின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையைக் கொடுத்தது. தொடர்ந்து வந்த காதல் கோட்டை புகழின் உச்சியில் அஜீத்தை நிறுத்தி தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் கிடைக்கச் செய்தது.