வடிவேலுக்கு காலில் பட்ட அடியால் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் : படத்தில் இப்படி நடக்க காரணம் இதான்

By John A

Published:

தமிழ்த் திரைப்படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்கள் இயக்கும் டைரக்டர்களில் சுந்தர்.சி முதன்மையானவர். உள்ளத்தை அள்ளித்தா முதல் கலகலப்பு 2 வரை தன்னுடைய படங்களில் காமெடி வசனங்கள் மூலமாக திரையரங்கில் சிரிப்பலைகளை உருவாக்கி ரசிகர்களை மெய்மறக்கச் செய்துவிடுவார்.

கவுண்டமணி, செந்தில் முதல் தற்போது உள்ள சந்தானம், சூரி, யோகிபாபு வரை அனைத்து காமெடி நடிகர்களையும் இவர் சூப்பராக பயன்படுத்தி இருப்பார். அந்த வகையில் சுந்தர் சி. – வடிவேலு காம்போவில் உருவான முதல் படமான வின்னர் படத்தை எப்போதும் மறக்க முடியாது. வடிவேலுவின் காமெடி படங்களின் பட்டியலில் வின்னர்  படத்திற்குத் தான் எப்போதும் முதலிடம். பிரசாந்த் மற்றும் ரியாஸ்கானுடன் வடிவேலு இதில் வரும் ஒவ்வொரு காட்சியும் இன்றளவும் பார்ப்பவர்கள் வயிற்றைப் பதம் பார்க்கும் எவர்கிரீன் காமெடிகளில் ஒன்று.

தற்போது சுந்தர்.சி இந்தப் படம் குறித்த தகவல் ஒன்றை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வின்னர் திரைப்படத்தில் வடிவேலு படம் முழுக்க காலை சாய்த்து நடப்பது போல் நடித்திருப்பார். உண்மையாகவே வடிவேலுவுக்கு அப்போது காலில் அடிபட்டிருந்ததாம்.

Kaipulla

ஆனால் வின்னர் படத்தில் வடிவேலுவை விடாப்பிடியாக நடிக்க வைத்த சுந்தர் சி அவருக்கு காலில் அடிபட்டு சாய்த்து சாய்த்து நடப்பதையே அவரின் கேரக்டராக மாற்றி அமைத்தார். முதல் காட்சியிலேயே ரியாஸ்கானிடம் காலில் அடிவிழுவது போன்ற காட்சியை வைத்து பின்னர் படம் முழுக்க இயல்பாகவே வடிவேலு காலை சாய்த்து தான் நடந்தாராம்.

டி.ராஜேந்தர் படங்களில் இத கவனிச்சுருக்கீங்களா? கிளைமேக்ஸ்களில் டி.ஆர். செய்யும் மேஜிக் இதான்

வின்னர் படத்தின் ‘கைப்புள்ள‘ கேரக்டர் வசனங்கள் இன்றும் சிறு பிள்ளைகளைக் கேட்டால் கூட சொல்லும் அளவிற்கு மிகவும் பிரபலம். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பஞ்சமே இல்லாமல் டயலாக்குகளை வாரி வழங்கும் வடிவேலுவின் முக பாவனைகளும், திரையில் அவர் காட்டிய மேனரிசமும், ஒவ்வொரு படத்திலும் அவர்பேசும் வசனங்கள் என அனைத்துமே ஹிட் லிஸ்ட் தான்.

தொடர்ச்சியாக சுந்தர் சி வடிவேலு மாதவன் நடிப்பில் உருவான ரெண்டு படத்திலும் சேர அப்படத்தின் காமெடி காட்சிகளும் ஹிட் ஆகியது. பின்னர் இருவரும் இணைந்து நடித்த தலைநகரம், நகரம் போன்ற படங்களின் காமெடிக் காட்சிகளும் எப்போது பார்த்தாலும் சிரிப்புக்கு பஞ்சம் வைக்காது என்றே சொல்லலாம்.