இந்தியன் படத்துல ஒரு துளி கூட ரஜினி சாரோட சாயல் இருக்காது… இயக்குனர் ஷங்கர் பளீர் பேச்சு

By Sankar Velu

Published:

இந்தியன் 2 படத்தோட இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் வரும் சுதந்திரத் தினத்தன்று வெளியாகும் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்திற்காக கமல், ஷங்கர் கூட்டணி நிறைய புதுப்புது டெக்னாலஜியைப் புகுத்தியுள்ளனர்.

கமலை 25 வயது இளைஞராக காட்டப் போகிறார்களாம். அது மட்டுமல்லாமல் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் மற்றும் நெடுமுடி வேணுவின் காட்சிகளையும் கட் பண்ணாமல் டெக்னாலஜியைப் பயன்படுத்தி அந்தக் கேரக்டர்களையும் தொடர்ந்து நடிக்க வைத்துள்ளார்களாம்.

Nedumudi venu
Nedumudi ven

இப்படிப் படத்தைப் பற்றிய புதுப்புது அப்டேட்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளன. இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் பல 100 மடங்கு எகிற வைத்துள்ளது. இந்தப் படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்புகள் ஏன் என்ற கேள்வி எழலாம். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இந்தியன் படத்தின் முதல் பாகம் செம மாஸ் ஹிட்.

இந்தியன் முதல் பாகம் 1996ல் வெளியானது. அப்போது இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. அப்போது கமல் நடித்த சில காட்சிகளையும், மேக் அப் மீதான கமலின் அர்ப்பணிப்பையும் பற்றி டைரக்டர் ஷங்கர் இவ்வாறு விவரிக்கிறார்.

இந்தியன் படத்தோட மேக் அப் டெஸ்ட்ல கமல் சாருக்கு இந்தியன் தாத்தாவோட டிரஸ் கொடுப்போம். அதை அவரு போடுவாரு. அதுல சட்டைப்பையில ஒரு பேனாவை வச்சிருக்கணும். அந்த பேனாவைப் பார்த்ததும் இது பழைய காலத்துக்கு மேட்ச்சா இல்லைன்னு அவரு கொண்டு வந்த ஒரு பேனாவைக் காட்டுறாரு. அதுல இருந்து இங்கை தெளிச்சிக் காட்றாரு.

India 1n 2
Indian 2

இது சரியா வரும்னு சொல்றாரு. அந்தப் பேனாவை அவரு வீட்ல இருந்து வரும்போதே கொண்டு வந்துருக்காரு. இந்த சின்ன விஷயத்தையும் கூட யாரும் கவனிச்சிக் குறை கண்டுபிடிச்சிரக் கூடாதுங்கறதுக்காக அவரே வீட்ல இருந்து மெனக்கிட்டு இந்தப் பேனாவைக் கொண்டு வந்தாரு. அந்த அளவு டெடிகேஷனா உள்ள ஆக்டர் தான் கமல் சார்.

India 1n 1
Indian 3

இன்னொரு விஷயம்… இன்டர்வியூவில கமல் சார நெடுமுடி வேணு அரெஸ்ட் பண்ண வந்து கேள்வி கேட்பாரு. அப்போ நாற்காலில இருந்து வரும் கட்டையை அப்படியே ஸ்டைலா சட்னு தள்ளி விட்டு அவரை அடிச்சி எழுந்திருக்கும்போது அப்படியே தலைமுடியை ஸ்டைலா கோதி விடணும். இந்த சீனை நான் ரஜினி சாரை மனசுல வச்சி ஸ்கிரிப்டுலயும் எழுதிட்டேன்.

அதைப் படிச்சிப் பார்த்ததும் கமல் சார் என்னை அப்படியே பார்த்தாரு. ஷாட் ரெடின்னு சொன்னதும் அவரு அந்த சீனை நடிச்சிக் காட்டுனாரு. அப்படியே டோட்டலி டிபரண்டா இருந்துச்சு. அதுல ரஜினி சாரோட சாயல் கொஞ்சம் கூட இருக்காது. அப்படியே அந்தக் கதாபாத்திரம் தான் தெரியும்.