ஜீன்ஸ் படத்துக்கு உண்மையாக வைக்கப்பட்ட தலைப்பு இதானா? தலைப்பில் வந்த சிறு குழப்பம்

By John A

Published:

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்திற்கு அடுத்தபடியாக உலகி அழகி ஐஸ்வர்யாராய், பிரசாந்த் ஆகியோரை வைத்து ஜீன்ஸ் படத்தினை இயக்கினார் ஷங்கர். 1998-ல் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் வசூலிலிலும், ஆடியோ விற்பனையிலும் சாதனை படைத்தது. சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக விளங்கியது. இப்படத்தின் கதை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தாய்க்கு நேர்ந்த அறுவை சிகிச்சை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டது.

சுஜாதாவின் வசனத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் டாப்ஸ்டார் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். தமிழ் சினிமாவில் இரட்டை வேட கதாபாத்திரங்களில் முற்றிலும் புதுமையான கதையைக் கொண்டு விளங்கியது ஜீன்ஸ் திரைப்படம்.

விநோத நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்த ஆர்.ஜே.பாலாஜி.. வேண்டுதல் நிறைவேறியதால் மகிழ்ச்சி

அனைவருக்கும் ஒரு சிறு சந்தேகம் இருக்கும். இந்தப் படத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஏன் ஜீன்ஸ் என்று தலைப்பு வைத்தார்கள் என்று. நாம் நினைப்பது போல் ஜீன்ஸ் என்பது ஆடையைக் குறிப்பது அல்ல. மரபியலில் பயன்படுத்தப்படும் Genes என்ற வார்த்தையையே முதலில் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். ஏனெனில் கதைப்படி பிரசாந்த் இரட்டை வேடம் என்பதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருந்திருக்கிறது.

அதன்பின் இயக்குநர் ஷங்கர் Genes என்ற தலைப்பு மிகவும் எலைட்டாக இருக்கிறது. எனவே எளிமையாகவும், அனைவருக்கும் புரியும்படியாக Jeans என மாற்றியிருக்கிறார்.
அப்போதைய உலக அதிசயங்கள் ஏழையும் அந்தப் பகுதிக்கே சென்று படமாக்கி கண்களுக்கு விருந்தளித்தார் ஷங்கர். அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் என்று வைரமுத்துவும் ஐஸ்வர்யாராயை வர்ணித்து எழுத படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

இன்றும் இந்தப் படத்தினைப் பார்க்கும் போது புதிதாகப் பார்ப்பது போலவே சுவாரஸ்யமாகச் செல்லும். மேலும் இந்தப் படத்தின் ஆடியோ கேசட்டுகளை ஜீன்ஸ் துணியில் கவர் போட்டு விற்பனை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.