ஷங்கரை கோபப்படுத்தியது இந்த நடிகரா? அதிரிபுதிரியாக வந்த பதிவுக்கு பின்னணியில் இதான் காரணமா?

By Chandra R

Published:

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் இயக்குனர் சங்கர். தற்போது கேம் சேஞ்சர் படத்தில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். கடைசியாக அவரின் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்தது.

சங்கரிடமும் இதை எதிர்பார்க்கவில்லை. கமலிடமும் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை என இந்தியன் 2 திரைப்படத்தை கழுவி ஊற்றாதவர்களே இல்லை. படத்தில் பிரம்மாண்டம் மட்டுமே இருந்தது தவிர கதை இல்லை என்று தான் பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஷங்கர் போட்ட ஒரு பதிவு சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது. அவர் ஏற்கனவே வேள்பாரி நாவலை படமாக்க திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அந்த நாவலின் ரைட்ஸ் இப்போது ஷங்கரிடம் தான் இருக்கிறதாம்.

ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் டிரைலரை பார்த்தவுடன் நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஏனெனில் வேள்பாரி நாவலை படமாக்கும் போது நான் எப்படி எடுக்க வேண்டும் என நினைத்தேனோ அது சம்பந்தமான காட்சிகள் அந்த ட்ரெய்லரில் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விட்டேன் என்று கூறி அவருடைய வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

இதைப்பற்றில் கோடம்பாக்கத்தில் ஒரு சில பேர் கூறும் போது சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் என்றால் தேவாரா படத்தை கூறி இருக்கலாம். அல்லது சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை பற்றி கூறியிருக்கலாம். ஏனெனில் அந்த இரு திரைப்படங்கள்தான் அந்த மாதிரி கதை பின்னணியில் வந்த திரைப்படங்கள் ஆகும்.

அவருடைய வருத்தத்திற்கு பின்னாடி ஒரு காரணம் இருந்தாலும் நான் இந்த மாதிரி நாவலின் ரைட்சை வாங்கி இருக்கிறேன் என அதிகாரப்பூர்வமாக சங்கர் இதுவரை கூறியிருக்கிறாரா இல்லை. ஒருவேளை கூறி இருந்தால் அந்தப் பக்கமே எந்த ஒரு இயக்குனரோ தயாரிப்பாளரோ வந்திருக்க மாட்டார்கள் .எதுவுமே சொல்லாமல் இப்போது என் நாவலை எடுத்து படமாக்கி இருக்கிறார்கள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என சங்கருக்கு எதிராக கோடம்பாக்கத்தில் ஒரு சில பேர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவர்கள் சொல்வதைப் போல இதுவரை சங்கர் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வேள்பாரி நாவலை பற்றி வந்ததே கிடையாது .நேற்று தான் அவர் போட்ட பதிவின் மூலம் உறுதியாகி இருக்கிறது.