ஜேம்ஸ் வசந்தனை மறக்காத சசிக்குமார்.. சுப்ரமணியபுரம் படத்தின் இசையமைப்பாளரான தருணம்

By John A

Published:

தமிழ் சினிமாவில் 1980-களின் காலகட்டத்தை திரையில் கொண்டு வந்து அதோடு மட்டுமல்லாமல் நடிகர் ஜெய்க்கு முதல் வெற்றியைக் கொடுத்து சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் தான் சுப்ரமணியபுரம். தியேட்டரிகளில் வெளிவந்து சில நாட்கள் கழித்து ரசிகர்களின் விமர்சனங்களால் பெரும் வெற்றி பெற்றது. சசிக்குமார் இயக்குநராகவும், நடிகராகவும் அடியெடுத்து வைத்தார். இந்தப் படத்தில் இயக்கம், திரைக்கதையைத் தாண்டி பேச வைத்தது பாடல்கள் தான்.

காதல் பாடல், திருவிழா பாடல், காதல் தோல்வி பாடல் எனக் கலவையாக 4 சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் ஜேம்ஸ் வசந்தன். அதுவரை கிறிஸ்தவப் பாடல்களுக்கு இசையமைத்தும், டிவிகளில் தொகுப்பாளராகவும் வலம் வந்த ஜேம்ஸ் வசந்தனை திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் சசிகுமார்.

சசிக்குமார் சிறுவனாக இருக்கும் போதே ஜேம்ஸ் வசந்தனிடம் அறிமுகமாகி இருக்கிறார். ஜேம்ஸ் வசந்தனின் இசைத் திறைமையைக் கண்டு வியந்து நான் படம் எடுத்தால் அதில் நீங்கள் தான் இசையமைப்பாளர் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஜேம்ஸ் வசந்தன் சசிக்குமார் அப்போது விளையாட்டாகச் சொல்கிறார் என்றெண்ணி நாளடைவில் அதை மறந்தே போய்விட்டார். சசிக்குமார் அதன்பின் திரைத்துறையில் இயக்குநர் பாலா, அமீர் ஆகியோரிடம் பணியாற்றி பின்னர் முதன் முதலாக சுப்ரமணியபுரம் படத்தினை தயாரித்து இயக்கினார்.

அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியா? உண்மை என்ன தெரியுமா? விஜய் கட்சி விளக்கம்

அப்போது ஜேம்ஸ் வசந்தனை சந்தித்த சசிக்குமார், தான் சிறுவனாக இருக்கும் போது கூறியதை அப்படியே நிறைவேற்றும் பொருட்டு அவரைத் தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். மேலும் நீங்கள் இசையமைப்பதை யாரிடம் கூற வேண்டாம் என்று கூறியிருக்கிறார். மேலும் நடிகர் நடிகைகள் கேட்டும் கூட யார் இசையமைப்பாளர் என்பதை வெகுநாட்களாகக் கூறாமல் இருந்திருக்கிறார். ஏனெனில் யாராவது எதையாவது சொல்லி மாற்றி விடுவார்கள் என்பதால் படம் வெளியாகும் வரை ஜேம்ஸ் வசந்தனைப் பற்றிக் கூறவே இல்லையாம் சசிக்குமார்.

அதன்பின் சுப்ரமணியபுரம் வெளியாகி கண்கள் இரண்டால் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆனது. மேலும் எங்கு பார்த்தாலும் இந்தப் பாடல் மோகமே. செல்போன் வளர்ந்து வந்த காலம் என்பதால் பலரது ரிங்டோனாகவும் இருந்தது. தொலைக்காட்சிகளிலும், பண்பலை வானொலிகளிலும் சுப்ரமணியபுரம் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. படத்தில் இப்பாடலின் போது தியேட்டரில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க ஜேம்ஸ் வசந்தன் மனைவி கண்ணீர் விட்டு அழுதாராம். தனது கணவரின் திறமை வீண்போகவில்லை என அவர் பெருமைப்பட்டிருக்கிறார்.

அதன்பின் ஜேம்ஸ் வசந்தன் சில படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.