இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தரிடம் பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வெங்கட்பிரபு ஹீரோவாக நடித்த உன்னைச் சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் சமுத்திரக்கனி.
முதல் படம் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது படமான நெறஞ்ச மனசு கேப்டன் விஜயகாந்தை வைத்து இயக்கினார். இப்படம் அவருக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுக்க அடுத்து வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் சமுத்திரக்கனிக்கு தமிழ்சினிமாவில் நிரந்தர இடம் கொடுத்தது. இடைப்பட்ட காலங்களில் அன்னை, தங்க வேட்டை, ரமணி, அரசி போன்ற சீரியல்களையும் இயக்கினார்.
பார்த்தாலே பரவசம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த சமுத்திரக்கனிக்கு பெரும் அடையாளம் கொடுத்த படம் சுப்ரமணியபுரம். இப்படி இயக்குநராகவும், நடிகராகவும் தென்னிந்திய மொழிகளில் தனக்கென தனி பாதையைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. பொதுவாக சமுத்திரக்கனியின் படங்களில் நல்ல கருத்துக்கள் இருக்கும். வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை யதார்த்தமாக சொல்லி சிந்திக்க வைப்பார்.
அப்படி நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்த நாடோடி படத்திற்குப் பின்னர் போராளி, நிமிர்ந்து நில் ஆகிய படங்களையும் இயக்கினார். அதனைத் தொடர்ந்து 2016-ல் அப்பா படத்தினை அவரை இயக்கி, தயாரித்து, நடித்தார். அப்பா திரைப்படம் ஒரு பொறுப்புள்ள தந்தை தன் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை உணர்த்தியது.
நல்ல கருத்துள்ள படமாக விளங்கிய போதும் அப்பா படம் சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு பறந்தது. நல்ல வரவேற்பு கிடைத்த போதும் அடுத்தடுத்த பெரிய படங்களின் வருகை போன்றவற்றால் அதன் வெற்றி நூலிழையில் தவறியது. மேலும் தொலைக்காட்சிகளிலும் பலகட்ட யோசனைக்குப் பின்னரே சாட்டிலைட் உரிமம் வாங்கினர்.
மீண்டும் கஜோலுடன் பிரபுதேவா.. 27 ஆண்டுகளுக்குப் பின் சேரும் ஜோடி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
ஏனெனில் இப்போது புதுப்பேட்டை, அன்பே சிவம், அப்பா போன்ற படங்களை நாம் கொண்டாடுவது போல் அப்போது இந்தப் படங்களுக்கான புரிதல் கிடைக்காமல் இருந்தது. காலப்போக்கில் இந்தப் படங்களின் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் இளைய தலைமுறையை யோசிக்க வைத்தது. ஆனால் சமுத்திரக்கனிக்கு அப்பா படத்தின் வியாபாரத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால் நடிப்பு ஒன்றே போதும் என நிறுத்தி விட்டார். இப்போது தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகராக வலம் வரும் சமுத்திரக்கனி கடைசியாக நாடோடிகள் 2 படத்தினையும் இயக்கினார். ஆனால் அந்தப் படமும் சுமாராகவே ஓடியது.
இதனையடுத்து படம் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது நடிப்பிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.