தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குனரும் தனக்கான பாணியை பின்பற்றி படங்கள் எடுப்பது வழக்கம். உதாரணமாக கே. பாலச்சந்தர் என்றால் பெண்ணியம் சார்ந்த படங்கள் அதிகம் இருக்கும். பாலா என்றால் உணர்வுபூர்வமான படங்கள் இருக்கும். சுந்தர் சி என்றால் காமெடி படங்கள் அதிகம் இருக்கும். அந்த வகையில் சட்டம் சார்ந்த படங்களை கொடுத்து மக்களிடம் புரட்சி இயக்குனர் என்று பெயர் பெற்றவர் தான் எஸ் ஏ சந்திரசேகர்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தை பூர்வீகமாகக் கொண்ட எஸ் ஏ சந்திரசேகர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். 1978ல் அவர் இயக்கிய முதல் படம் அவள் ஒரு பச்சைக் குழந்தை. ஆனால் இத்திரைப்படம் சரியாக சரியாக வெற்றி பெறாததால் மீண்டும் விஜயகாந்த் பூர்ணிமா தேவி நடிப்பில் 1981இல் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இயக்கினார். இந்த படம் அவருக்கு பெரிய புகழை வாங்கி கொடுத்தது. இதன்பின் விஜயகாந்தை வைத்து தனியாக 19 படங்கள் வரை இயக்கினார். இவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றன. மேலும் விஜயகாந்துக்கு புரட்சி கலைஞர் என்ற பட்டமும் இவர் இயக்கிய படங்களில் மூலமாக கிடைத்தது. ஏனெனில் அனைத்து படங்களும் சட்டம் சார்ந்த சட்டம் சார்ந்ததாகவே இருந்தது. மேலும் ரஜினியை வைத்து நான் சிகப்பு மனிதன் என்ற படத்தையும் இயக்கினார்.
அதன் பின் தனது மகனும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யை சினிமா உலகிற்கு நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தாலும் நாளைய தீர்ப்பு படம் விஜய்க்கு கதாநாயகன் அவதாரத்தை கொடுத்தது. அதன் பின் விஜய்க்காக ரசிகன், விஷ்ணு, தேவா, செந்தூரப்பாண்டி, ஒன்ஸ்மோர் ஆகிய படங்களை இயற்றினார். கிட்டத்தட்ட 70 படங்கள் வரை இயக்கிய எஸ் ஏ சந்திரசேகர் தற்போது படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியின் 26வது படம் ‘வா வாத்தியாரே’!!
இந்நிலையில் டாக்டர் எம்ஜிஆர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இவரது சாதனைகளை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் பட்டம் வழங்கப்பட்டது. அதில் அவர் பேசும் பொழுது “நான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் தான். ஆனால் இயேசுவைப் பின்பற்றவில்லை. நான் மதங்களைப் பின்பற்றுபவன் அல்ல, மனிதத்தை பின்பற்றுகிறவன். புனித நூல்களில் சொல்லியுள்ள கருத்துக்களை பின்பற்றுகிறவன். மதங்களை பார்ப்பது கிடையாது என்று பேசினார்.
சமீப காலமாக எஸ்ஏ சந்திரசேகர் பல கோவில்களில் சென்று வழிபாடுகளை நடத்தி அன்னதானம் போன்றவற்றை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.