தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக இருப்பவர் ராஜ்குமார் பெரியசாமி. கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ராஜ்குமார் பெரியசாமி. பின்னர் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் திரைக்கதையும் எழுதி இருக்கிறார். இதற்கு அடுத்ததாக விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்கியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வடித்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல் வெளியான மற்ற மொழிகளிலும் ஹிட் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது அமரன்.
அமரன் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உடன் இணைந்து சோனி பிக்சர்ஸ் தயாரித்தது. இந்த திரைப்படத்தை தயாரிப்பது எனக்கு பெருமை என்று கமலஹாசன் கூறியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கமல்ஹாசனை பற்றி பகிர்ந்திருக்கிறார்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியது என்னவென்றால் அமரன் திரைப்படம் போட்டிருந்த பட்ஜெட்டை தாண்டி எங்கேயோ போய்விட்டது. படத்தை ஸ்டாப் பண்ணிடலாமா அப்படிங்கற நிலைமை வந்துருச்சு. அப்போதான் கமல் சார் தானா முன் வந்து இந்தப் படத்தை தயாரிக்கிறேன்னு சொன்னாரு. கமலஹாசன் கதையில எல்லாம் தலையிடுவாரு அப்படின்னு எல்லாரும் சொல்றதெல்லாம் உண்மை கிடையாது. நான் என்ன எல்லாம் கேட்டேனோ அதெல்லாம் எனக்கு மனசு நோகாம செஞ்சு கொடுத்தாரு கமல் சார். ஒரு வகையில் இந்த படம் ரிலீஸ் ஆகுறதுக்கு காரணமே கமல் சார் தான் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.