சின்னத்தம்பி கதை எப்படி உருவாச்சு தெரியுமா? பி. வாசுவிடம் சவால் விட்டு நடித்த மனோரமா..

By John A

Published:

தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் படங்களில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சின்னதம்பி. பி. வாசு இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இயக்கத்தில் பிரபுவின் சினிமா கேரியரையே உச்சத்தில் நிறுத்தியது சின்னதம்பி திரைப்படம். 1991-ல் வெளியான இப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. சாதாரண கிராமத்துக் கதையை யாருமே யோசிக்காத புதிய திருப்பங்களுடன் படமாக்கி இருப்பார் இயக்குநர் பி. வாசு.

பொதுவாக இயக்குநர் பி.வாசு தான் எடுக்கப்போகும் படங்களின் கதையை நடிகர்களிடம் கூறாமல் முதன் முதலாக தன் வீட்டில் வேலை செய்பவர்களுக்குக் கூறுவது வழக்கமாம். சாதாரண ஆடியன்ஸ்-க்கு எப்படி படம் எப்படி சென்று சேரும் என்பதை முன்னரே கணித்து அதற்கேற்றாற்போல் திரைக்கதை எழுதுபவர். இந்நிலையில் பி.வாசு ஒரு கிராமத்திற்கு சூட்டிங் சென்ற போது அங்கே உள்ள ஜமீன்தார் வீட்டில் படமாக்கப்பட்டதாம். அப்போது அந்த ஜமீன்தார் வீட்டுப் பெண்களை பார்ப்பதற்கு வீட்டின் பின்னால் ஒரு சிறிய ஜன்னல் வழியாகவே பார்ப்பது வழக்கமாம். மேலும் அவர்கள் வெளியில் செல்ல வேண்டுமானால் அவர்களுக்கென சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு அதன்வழியேதான் ஊரின் எல்லைக்குச் செல்வார்களாம். இப்படித்தான் அந்தக் கிராமம் இருந்திருக்கிறது.

இதனைக் கேள்விப்பட்ட பி.வாசுவுக்கு ஓர் ஐடியா தோன்ற 3 அண்ணன்கள், ஒரு தங்கை, தங்கையை ஆண்கள் முகத்தினையே காட்டாமல் வளர்க்கிறார்கள். அதன்பின் சற்று குழந்தைத்தனம் கொண்ட ஒரு இளைஞன் அவளுடன் பழகும் வாய்ப்புக் கிட்ட, தங்கை இறுதியில் அவனையே காதலித்து மணக்கிறாள். இதுதான் கதை எனப்பிடித்து சின்னதம்பி படத்தினை உருவாக்கினார்.

அந்த நேரம் அவர் சத்யராஜை வைத்து நடிகன் படம் எடுத்துக் கொண்டிருந்தார். அதில் மனோரமாவின் கதாபாத்திரம் சத்யராஜை ஒருதலையாகக் காதலிப்பதுபோன்றும், மிடுக்காகவும் இருக்கும். மேலும் குஷ்புவின் நடிப்பை அந்தப் படத்தில் பார்த்து சின்னதம்பி படத்திற்கு அவரையே ஹீரோயினாக்கி இருக்கிறார்.

சாய் பல்லவி இப்படித்தான் கதையை தேர்ந்தெடுக்கிறாங்களா? அமரன் விழாவில் சீக்ரெட்டை உடைத்த சாய் பல்லவி..

மேலும் ஆச்சி மனோரமாவிடம் வயதான விதவைத் தாய் வேடம் உங்களுக்கு செட் ஆகுமா என்று கேட்டிருக்கிறார். ஏனெனில் முதல் படத்தில் சத்யராஜை ஒருதலையாகக் காதலிக்கும் வேடம். அப்படியே நேர்மாறான கதாபாத்திரம் சின்னதம்பி என்பதால் பி.வாசு யோசிக்க, ஆச்சி மனோரமா பி.வாசுவிடம் அது வேற, இது வேற என்று கூறி சின்னதம்பி படத்தில் நடித்தார்.

எதிர்பார்த்தது போலவே படம் தாறுமாறாக ஓடியது. படத்தின் பாடல்களும் கிராமத்து தெருக்களை அலற விட்டது. சொர்ணலதாவின் குரலில் போவாமா ஊர்கோலம் பாடல் இன்றும் கிளாசிக் ஹிட் பாடலாக விளங்குகிறது. இளையராஜா படத்தின் மற்றொரு ஹீரோவாகி சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார். மேலும் கவுண்டமணியின் காமெடியும் கைகொடுத்த சூப்பர் கமர்ஷியல் படமாக அமைந்தது.