சாதியை வென்ற மாரிசெல்வராஜின் காதல் திருமணம்.. தடைகளைத் தாண்டி காதலியை மனைவியாக்கிய தருணம்..

By John A

Published:

நெல்லை மண்ணில் இருந்து தமிழ் சினிமாவில் நடிகராக ஆசைப்பட்டு உள்ளே நுழைந்தவர் தான் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் கற்றது தமிழ், பேரன்பு, தரமணி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். கற்றது தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். முதல் படமே சாதியக் கொடுமைகளைப் பேசும் படமாக இயக்கியதால் கவனிக்க வைத்தார்.

பா.ரஞ்சித் வரிசையில் தலித் அரசியலைப் பேசும் படமாக பரியேறும் பெருமாள் உருவாக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்தபடியாக தனுஷுடன் கர்ணன், உதயதிநிதி வடிவேலு நடிப்பில் மாமன்னன் போன்ற படங்களை இயக்கி முன்னனி இயக்குநர்கள் லிஸ்ட்டில் இணைந்தார்.

இயக்குநர் மாரிசெல்வராஜுக்கு காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி திவ்யா. மாரி செல்வராஜும் திவ்யாவும் காதலித்த தருணத்தில் தங்களது திருமணம் பெற்றோர் விருப்பப்படியே நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

சின்மயி பாடிய பாடலை மாற்றிப் பாடிய ஸ்ரேயா கோஷல்.. சூப்பர் மெலடியாக உருவான வரலாறு

இருவரும் வேறு சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள் என்பதால் இக்காதல் கைகூடுமா என சந்தேகம் இருந்துள்ளது. இந்நிலையில் மாரி செல்வராஜ் தான் எழுதிய சிறுகதைகள், கவிதைகள் உள்ளிட்டவற்றை திவ்யாவிடம் கொடுத்து அதனை அவர் அம்மாவை வாசிக்கச் சொல்லி அவரைப் பற்றிய அறிமுகத்தினை தனது எழுத்து வாயிலாகத் தெரியப்படுத்தியிருக்கிறார்.

அதன்பின் திவ்யாவின் அம்மாவினைச் சந்தித்து தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறியபின் அவரது தாய் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். எனினும் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். உங்களுக்கு எப்படி இயக்குநர் ஆவது லட்சியமோ அதேபோல் என் பெண்ணுக்கும் சுற்றம் சூழ அனைவரின் வாழ்த்துடனும் திருமணம் நடைபெற வேண்டும்.

ஆகவே எனது உறவினர்களிடம் சென்று சம்மதம் பெற்று வாருங்கள் என்று கூறியிருக்கிறார். மாரி செல்வராஜும் திவ்யாவின் மாமா, சித்தப்பா என முக்கிய உறவினர்களைச் சந்தித்து காதல் விபரத்தைக் கூற அதன்பின் அவர்களும் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

இப்படியாக கைகூடிய காதல் திருமணம் வரை சென்றது. தனது திருமண அழைப்பிதழைக் கூட காதல் கல்யாண அழைப்பிதழ் என்றேதான் அச்சடித்தாராம் மாரி செல்வராஜ். இப்படி இருவீட்டாரின் முழு சம்மதத்துடன் சாதியை வென்று இவர்களது காதல் கைகூடி திருமணத்தில் முடிந்தது.