இயக்குநர் விக்ரமனிடம் உதவியாளராக இருந்து புரியாத புதிர் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களையும் வைத்து இயக்கிய பெருமை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு உண்டு. சரத்குமாரை வைத்து மட்டும் 10 படங்களை இயக்கியுள்ளார்.
இப்படி சொன்ன காலத்தில் சொன்ன பட்ஜெட்டில் கமர்ஷியல் படங்களை எடுத்த கே.எஸ்.ரவிக்குமார் சினிமா வரலாற்றில் தோல்விப் படங்கள் என்பது வெகு சிலவே. மற்றபடி அனைத்துப் படங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்றவையே. உதாரணமாக படையப்பா, நாட்டாமை, வில்லன், வரலாறு, தசாவதாரம் போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.
அந்தவகையில் கே.எஸ்.ரவிக்குமார் சிம்புவை வைத்து இயக்கிய படம் தான் சரவணா. 2006- ல் வெளிவந்த இப்படத்தில் சிம்புவுடன் ஜோதிகா, விவேக், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருப்பர். இப்படமும் வெற்றிப் படமே. சாதாரணமாக அந்த காலகட்டத்தில் சிம்புவின் மேல் ஒரு விமர்சனம் இருந்தது. ஷுட்டிங்கில் குறித்த காலத்தில் வர மாட்டார் என்பதுதான். அதனை மெய்ப்பிக்கும் வகையில் சரவணா திரைப்படத்தின் ஷுட்டிங்கின் போதும் தாமதமாகவே சிம்பு வந்திருக்கிறார்.
இரண்டொரு நாள் இதனைக் கவனித்துப் பார்த்த கே.எஸ்.ரவிக்குமார் சிம்புவை அழைத்து நீங்கள் வேறு இயக்குநரை வைத்து படம் இயக்கிக் கொள்ளுங்கள். எனக்கும் உங்களுக்கும் செட் ஆகாது. நான் சொன்ன நேரத்தில் ஷுட்டிங் வருவதாக இருந்தால் படத்தினை இயக்குகிறேன். இல்லையென்றால் வேறு இயக்குநரைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அல்லது என்னால் இத்தனை மணிக்குத் தான் வர இயலும் என்பதை முன்கூட்டியே தெரிவித்து விடுங்கள். நான் அதற்கேற்ப ஷுட்டிங்கை மாற்றிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் சிம்புவிற்கு தர்மசங்கடமாகிப் போகவே அடுத்துவந்த நாட்களில் சரியாக குறித்த நேரத்தில் ஷுட்டிங்குக்கு வந்திருக்கிறார்.
என்னோட பாட்டெல்லாம் சினிமா தலைப்பு வச்சுருக்காங்க.. இளையராஜாவை மறைமுகமாகத் தாக்கிய வைரமுத்து..
சரவணா படம் இயக்கிய தருணத்தில் கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரம், வரலாறு என கைவசம் அடுத்தடுத்த படங்களை வைத்திருந்தார். எனவே சரவணா படத்தினை குறுகிய சில நாட்களிலேயே எடுத்து முடித்து அதனையும் வெற்றிப் படமாக மாற்றினார். சிம்புவும் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வேறு இயக்குநரின் படங்களிலும் சரியான நேரத்திற்குப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். சரவணா திரைப்படம் சிம்புவிற்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.