இனிமேல் ஸ்ரீகாந்தை ஹீரோவா வச்சு படம் எடுக்க மாட்டேன்.. கடுப்பான இயக்குநர் ஹரி.. ஏன் தெரியுமா?

By John A

Published:

தமிழ் சினிமாவில் அடிதடி சண்டைக் காட்சிகளுக்கும், பரபரப்பான திரைக்கதைக்கும் பெயர் வாங்கிய இயக்குநர் யார் என்றால் அது ஹரி தான். இயக்குநர்கள் கே. பாலச்சந்தர், சரண், நட்ராஜ் உள்ளிட்ட பலரிடம் தொழில் கற்று பிரசாந்த் நடித்த தமிழ் படம் மூலம் கடந்த 2002-ல் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இதனையடுத்து விக்ரம் அப்போது உச்சத்தில் இருந்த நேரத்தில் அவருக்கு சாமி என்ற மெகா பிளாக் பஸ்டர் திரைப்படத்தினைக் கொடுத்தார்.

இந்நிலையில் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தான் தயாரித்த ரோஜாக்கூட்டம் திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை அறிமுகப்படுத்தினார். மென்மையான காதல் கதையைக் கொண்ட இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக பாடல்கள் இன்றும் மெலடி ஹிட்ஸ்களாக ஒலிக்கிறது. இதனையடுத்து ஸ்ரீ காந்த் ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம் ஆகிய படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இதனால் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவத்தில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமான நிலையில் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் அப்போது இயக்குநர் ஹரியை அழைத்து ஸ்ரீ காந்துக்காக ஒரு ஆக்ஷன் திரைப்படத்தினை இயக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மீண்டும் களமிறங்கப் போகும் சக்திமான்.. இந்த சீரியல்ல அப்படி என்னதான் இருக்கு..?

அப்போது இயக்குநர் ஹரி சாமி படத்தினை இயக்கிக் கொண்டிந்தார். இந்நிலையில் ஆஸ்கர் பிலிம்ஸ் பெரிய நிறுவனம் என்பதால் மறுப்பேதும் சொல்லாமல் சம்மதித்து ஸ்ரீகாந்த்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. சாமி படம் வந்த பிறகு அடுத்த படத்தின் கதையை ஆரம்பிக்கலாம் என எண்ணி இயக்குநர் ஹரி அதில் கவனம் செலுத்த, ஸ்ரீ காந்த் ஹரியுடன் இணைய உள்ள படத்தின் கதை என்ன, எப்படி காஸ்ட்டியூம் என எதுவுமே தெரியாமல் இருந்திருக்கிறார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஆனந்தனிடம் இயக்குநர் ஹரியிடம் எப்போது ஸ்ரீ காந்தை வைத்து ஷுட்டிங் ஆரம்பிக்கப் போகிறீர்கள், கதை என்ன என்று கேட்குமாறு அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் பத்திரிக்கையாளர் ஆனந்தன் இயக்குநர் ஹரி சற்று முன்கோபக்காரர் இதனால் அங்கு ஏதும் நடந்தால் நான் பொறுப்பல்ல என்று கூறி சாமி படத்தின் ஷுட்டிங்கில் இருந்த ஹரியிடம் சென்று ஸ்ரீகாந்துக்கு என்ன கதை என்று கேட்டிருக்கிறார்.

உடனே இயக்குநர் ஹரி தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரைனைத் தொடர்பு கொண்டு நாம் இருவரும் இணைந்து திட்டமிட்ட படத்தை நான் இயக்கவில்லை என்று கூறியிருக்கிறார். பத்திரிக்கையாளர் வலைபேச்சு ஆனந்தன் ஏன் என்று கேட்க, ஒரு ஹீரோவிடம் கதை கூட கூறாமலா நான் படம் எடுப்பேன். சாமி படத்தினை எப்படி நுணுக்கமாக இயக்குகிறேன் தெரியுமா? அவருடன் எனக்கு பணிபுரிய விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார். இதை அப்படியே ஸ்ரீகாந்திடம் கூற அவரும் பராவாயில்லை என்று கூறியிருக்கிறார்.

சாமி படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அப்போது ஸ்ரீகாந்த் ஹரியின் படத்தில் இணையும் வாய்ப்பை இழந்துவிட்டோமே என்று பத்திரிக்கையாளர் வலைபேச்சு ஆனந்தனிடம் கூறி ஆதங்கப்பட்டிருக்கிறார்.