சொந்த ஊரில் தனிமைப்படுத்தப்பட்ட இயக்குனர் பாரதிராஜா!!

உலகில் 200 நாடுகளுக்கும்மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளது, மிகப் பெரும் பொருளாதாரம் கொண்ட வல்லரசு நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அவதிக்குள்ளாகின. மார்ச் மாதத் துவக்கத்தில் இந்தியாவில் கால் பதித்த கொரோனா தற்போது…

உலகில் 200 நாடுகளுக்கும்மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளது, மிகப் பெரும் பொருளாதாரம் கொண்ட வல்லரசு நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அவதிக்குள்ளாகின.

மார்ச் மாதத் துவக்கத்தில் இந்தியாவில் கால் பதித்த கொரோனா தற்போது 2 மாதங்களைக் கடந்தநிலையிலும் ஓரளவு இழப்பினை மட்டுமே சந்தித்து, சிகிச்சைகளை அளித்து வருகின்றது.

மற்றநாடுகள் அளவு இழப்பினைச் சந்திக்காவிட்டாலும் இதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இந்தியாவும் திணறியே வருகின்றது. அந்தவகையில் தமிழகத்தின் மற்ற இடங்களைக் காட்டிலும் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது.

03bbc5df3d61da4052a2870bd0364310

இதனால் சென்னையில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று மற்ற இடங்களுக்கு செல்பவர்களை அந்தந்த இடங்களில் கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி வைக்கின்றனர்.

அந்தவகையில் இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா சென்னையில் இருந்து தேனியில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

மேலும், அவரது வீட்டின் வெளியே அரசாங்கத்தின் சார்பில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சிலர் பாரதிராஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், அதனால் அவரைத் தனிமைப்படுத்தியுள்ளனர் என்று வதந்திகளையும் பரப்பி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன