தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களாக மக்கள் மத்தியில் அறியப்படும் பலரும் ஏதாவது ஒரு விதத்தில் தனித்துவமான திறனுடன் விளங்குவார்கள். அப்படி ஒவ்வொரு காலத்திலும் பல இயக்குனர்கள் சில தனி திறமைகளோடு விளங்கும் சூழலில் இயக்குனர் பாலாவின் திரைப்பட மேக்கிங்கிற்கு பிரத்யேக ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.
மிக தத்ரூபமாக எளிய மக்களின் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை அதே வலியுடன் அப்படியே நிஜ வாழ்க்கை போல சினிமாவில் கண் முன் கொண்டு வரும் திறன் பாலாவிடம் உள்ளது. அவர் படத்தில் ஒருவர் மற்றொருவரை அடித்தால் கூட நிஜத்தில் அடிப்பது போன்ற உணர்வைத் தான் கொடுக்கும்.
தாக்கத்தை ஏற்படுத்தும் பாலா..
அந்த அளவுக்கு ஏழை எளிய மக்களின் வாழ்வில் உள்ள வலிகளையும், ரணங்களையும் அப்படியே கண்முன் கொண்டு வந்து நம்மை பல நாட்கள் தூங்க விடாமல் செய்யும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் தான் இயக்குனர் பாலா. இவரது இயக்கத்தில் உருவான சேது, பிதாமகன், நந்தா, நான் கடவுள், பரதேசி என பல திரைப்படங்கள் தேசிய விருதுகளை வென்றிருந்ததுடன் மட்டுமில்லாமல் அந்த படத்தின் பெயரை சொன்னாலே ஒரு வித வேதனையை நம் உடம்பிற்குள் ஏற்படுத்தும்.
பாலாவின் இயக்கத்தில் கடைசியாக வெளியான தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் பெயர் எடுக்கவில்லை. இதனையடுத்து, அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி உள்ள வணங்கான் திரைப்படம், ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு மத்தியில் இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமீபத்தில் இந்த நிகழ்ச்சியும், வணங்கான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் சேர்ந்து நடைபெற்றிருந்தது.
காமெடியா இருந்துச்சு..
இதில் சூர்யா, சிவகுமார், சிவகார்த்திகேயன், லிங்குசாமி, மாரி செல்வராஜ் என பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது சிவகுமா்ரை பாலா நேரடியாக கலாய்த்த சம்பவம், அதிக கவனம் பெற்று வருகிறது. கடந்த 1973 ஆம் ஆண்டு, சிவகுமார், ஸ்ரீவித்யா, கே பி சுந்தராம்பாள் ஆகியோர் நடிப்பில் வெளியான காரைக்கால் அம்மையார் திரைப்படத்தில் “தகதகவென ஆடவா, சிவசக்தி சக்தியோடு ஆடவா” என்ற பாடல் இடம்பெற்றிருக்கும்.
இந்த பாடல் தொடர்பாக பல சுவாரஸ்ய தகவல்களை பாலா இருக்க, மேடையில் பகிர்ந்தார் சிவகுமார். அப்போதே பிரம்மாண்டமாக அந்த பாடல் தயாரிக்கப்பட்டதாகவும் குறிப்பிடும் அவர், “உயிரை கொடுத்து அந்த பாடலில் நடித்திருந்தேன். ஆனால், பிதாமகன் திரைப்படத்தில் பாடலை ரீமேக் செய்து தகதக பாடலை கிண்டல் செய்து விட்டான்.
மனதார சொல்லு. என்ன ஆலோசனையில் அந்த பாடலை அப்படி காமெடியாக செய்தாய். என்னை காமெடியாக மாற்ற நினைத்தாயா?” என்று பாலாவிடம் சிவகுமார் கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் பாலா, “நீங்களும், உங்களுடன் ஆடிய அனைவரது ஆட்டத்தை பார்க்கும் போது ரொம்ப நகைச்சுவையாக இருந்தது” என வெளிப்படையாக சொல்லி விட்டார்.
இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த சிவகுமார், “உலகமே கொண்டாடுன நடனம் உனக்கு நகைச்சுவையா இருந்துச்சா?. உன் மீது வழக்கு போட போகிறேன் என்றும் ஜாலியாக சொல்கிறார்.