நடிகர் சூர்யாவுக்கு காக்க காக்க எப்படி மாஸ் ஹிட் கொடுத்து கமர்ஷியல் ஹீரோவாக கௌதம் வாசுதேவ் மேனன் மாற்றினாரோ அதே போல் சூர்யாவுக்குள் இருக்கும் நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வந்து அவருக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் பாலா. சேது படத்தில் எப்படி விக்ரமுக்கு கம்பேக் கொடுத்தாரோ அதேபோல் நந்தா படம் மூலமாக சூர்யாவுக்கும் ஒரு திருப்புமுனையைக் கொடுத்தார்.
நந்தா படம் சூர்யா என்னும் நடிப்பு அரக்கனை வெளியில் கொண்டுவர அதன்பின் சூர்யாவுக்கு குவிந்த வாய்ப்புகள் ஏராளம். இதனையடுத்து விக்ரம், சூர்யா இருவரையும் இணைத்து பிதாமகன் என்னும் பிளாக் பஸ்டர் படத்தைக் கொடுத்து இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் இயக்குநர் பாலா.
நாமும் பாலா இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க மாட்டோமா என்று ஏங்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் மீண்டும் சூர்யாவை வைத்து எடுக்க திட்டமிடப்பட்ட படம்தான் வணங்கான். இப்படத்தின் ஷுட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற திடீரென்று இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் சூர்யா.
ஏனென்றால் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படம் கைவிடப்பட்டது. இதனையடுத்து ஹீரோவாக அருண் விஜய்யை பாலா நடிக்க வைக்க தொடர்ந்து விறுவிறுப்பாக ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிஷ்கின் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படியா எல்லாரையும் அழ வைப்பீங்க? நடிகர் தாமுவுக்கு எதிராக வலுக்கும் குரல்கள்
தற்போது பாலா சூர்யா பற்றி பேசுகையில், சூர்யா எனது சகோதரர் போல, மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாலா இவ்வாறு கூறியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முறிந்த கூட்டணி, பாலாவின் இந்தக் கருத்தால் மீண்டும் ஒன்று சேரலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் மிஷ்கின் இசையமைத்துள்ள DEVIL திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குர் பாலா வணங்கான் திரைப்படத்தின் அப்டேட்டை பகிர்ந்து கொண்டார். வணங்கான் படத்தில் மிஷ்கின் நடிப்பு மற்றும் பங்களிப்பு குறித்து பேசினார். மேலும் ஷாட்களில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை மிஷ்கினிடம் கற்றுக் கொண்டதாகவும், அவரைப் பார்த்தால் பொறாமையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.