தமிழ்ப்படங்கள் ரசிகர்களின் ரசனையைத் தூண்ட வேண்டுமானால் பல்வேறு விதமான டெக்னிக்குகளை இயக்குனர்கள் கையாளுகின்றனர். இவை மாறுபட்ட ரசனையைத் தர வேண்டும். அரைத்த மாவையே அரைத்த கதையாக இருந்தால் படம் ரசிகனுக்குப் புளித்துப் போய் விடும்.
டைரக்டர் அமீர் படங்கள் என்றாலே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். படம் பார்க்கும் போது நமக்கு நேரம் போவதே தெரியாது. படத்தின் கதைக்குள் நாம் ஐக்கியமாகி விடுவோம்.
மதுரைக்காரர். பி.ஏ. படித்துள்ளார். 2002ல் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்தார். இவரது படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
மௌனம் பேசியதே
இயக்குனர் அமீருக்கு இதுதான் முதல் படம். நல்ல படம். அறிமுகமே ரசனையைத் தூண்டும் விதத்தில் முத்தாய்ப்பாக அமைந்தது.
இது ஒரு ரொமான்டிக் காதல் படம். வித்தியாசமான படைப்பு. சூர்யாவை மாறுபட்ட கோணத்தில் காட்டியிருப்பார்.
ராம்
2005ல் வெளியானது. இது ஒரு த்ரில்லர் கதை. அம்மா மகன் பாசம் அற்புதம். இந்தக் காட்சிகளைத் திரையில் பார்க்கும் போது கண்களைக் கலங்க வைத்து விடும். படத்தின் நாயகன் ஜீவா. அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
2006ல் இந்தப் படம் சைப்ரஸ் நாட்டில் நடந்த உலகப் படவிழாவில் திரையிடப்பட்டு 2 விருதுகளைப் பெற்றது.
பருத்தி வீரன்
2007ல் இந்தப் படம் வெளியாகி தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது.
கிராமத்தில் நடக்கும் கரடுமுரடான காதலைப் படத்தில் காட்டியுள்ளார் இயக்குனர் அமீர். கார்த்தி இந்தப் படத்தில் அறிமுகமே என்றாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் முற்றிலும் வித்தியாசமானது. படத்தின் கிளைமாக்ஸ் நமக்குள் ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கி விடுகிறது.
ஆதிபகவன்
2013ல் வெளியானது. ஜெயம் ரவியின் மாறுபட்ட நடிப்பில் உருவான படம் இது. படத்தோட தோல்வியை யாரும் எதிர்பார்க்கவில்லை.
தொடர்ந்து வேறு படங்களை இயக்கவில்லை. 2009ல் யோகி படத்தில் நடித்தார். வடசென்னை இவரது நடிப்பில் வெளியான சிறந்த படம். இவர் நடிகர் ஆர்யாவை வைத்து சந்தனத்தேவன் படம் எடுப்பதாக இருந்தது. ஆனால் படம் ஏனோ வெளிவரவில்லை. படம் கிடப்பில் போடப்பட்டது.