அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்… இப்போது அந்த சீரியலில் நடிக்கிறாரா?

Published:

அஜித்தை வைத்து காதல் கோட்டை, வான்மதி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அகத்தியன் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியலில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் மூன்று முடிச்சு.

இந்த சீரியல் கிராமத்து பின்னணி கொண்ட ஒரு ஏழைப் பெண்ணுக்கும் மிகவும் செல்வாக்கு வாய்ந்த ஒரு ஆணுக்கும் இடையில் இருக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஹீரோவாக நீயாஸும் ஹீரோயின் ஆக ஸ்வேதாவும் நடித்து வருகிறார்கள்.

ஏற்கனவே இந்த சீரியலில் பல சினிமா பிரபலங்கள் உள்ளடங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோவுக்கு அம்மாவாக நடிகர் சஞ்சீவின் மனைவி பிரீத்தி நடிக்கிறார். கதாநாயகியின் தந்தையாக இயக்குனர் பாரதிராஜாவின் சகோதரர் தேனி முருகன் நடித்து வருகிறார்.

இந்த சீரியலை இயக்குபவர் தென்னவன் படத்தை இயக்கிய நந்தன் சி முத்தையா தான் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் தான் இப்போது அகத்தியன் இணைந்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித் குமாரின் ஹிட் லிஸ்ட்டில் அகத்தியன் இயக்கிய படங்களின் பெயர்கள் நிச்சயமாக இருக்கும் .

குறிப்பாக காதல் கோட்டை திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் என்ற தேசிய விருதை பெற்றவர் அகத்தியன். பல படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். சில படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார். அதனால் அகத்தியன் இப்போது மூன்று முடிச்சு தொடரில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானதும் இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

அகத்தியனை பொறுத்தவரைக்கும் அவருக்கு மூன்று மகள்கள். அவர்கள் அனைவருமே சினிமாத்துறையில்தான் இருக்கிறார்கள். அதுவும் மிகவும் பிரபலமாக இருக்கிறார்கள். நடிகை விஜயலட்சுமி சென்னை 28 படத்தில் நடித்து புகழ்பெற்றவர். இன்னொரு மகளான நிரஞ்சனி கண்ணும் கண்னும் கொள்ளையடித்தால் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருப்பார்.

மற்றொரு மகளான கனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதில் நிரஞ்சனி இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை திருமணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...