இந்திய சினிமா கிட்டத்தட்ட 125 ஆண்டுகளைக் கொண்ட நீண்ட வரலாற்றினைக் கொண்டது. தாதா சாகேப் பால்கே, சத்யஜித்ரே, தியாகராஜபாகவதர், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., என பல பெரும் ஜாம்பவான்களின் முயற்சியால் இன்று மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. வெறும் நடிகர்கள் மட்டுமின்றி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் என அனைத்தும் கொண்ட ஒரு மாபெரும் துறையாக விளங்குகிறது. ஆரம்பத்தில் மௌனப் படங்களாக வந்து பின்னர் பாடல்களைக் கொண்டும், அதன்பிறகும் வசனங்களாகவும் இந்திய சினிமா வளர்ந்தது. அப்போதிருந்து இன்றுவரை ஒவ்வொன்றிலும் பல புதுமைகள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது.
அந்த வகையில் தமிழ்சினிமாவில் வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி சில புதுமையான விஷயங்கள் கொண்டு வரப்பட்டது. அப்படி கொண்டுவரப்பட்டது தான் பாடல்களில் புதுமை. இப்படியும் பாடல்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவரலாம் என எம்.எஸ்.வி. முதல் இன்றுள்ள அனிருத் வரை ரசிகர்களைக் கவர்ந்திழுத்தினர்.
அவ்வாறு உருவான சில பாடல்கள்.
என் கண்மணி உன் காதலன்..
சிவக்குமார் நடித்த சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக பயணங்களின் போது இந்தப் பாட்டு இல்லாமல் இருக்காது. ஒரு பேருந்தில் ஹீரோ ஹீரோயின் டூயட் பாடல் அப்படியே விரிந்து வேறு லொகேஷன் போகும். இந்தப் பாடலை இளையராஜா இசையமைத்த விதம் புதுமையானது. இந்தப் பாடலின் இடையில் வரும் கண்டக்டர் வசனங்களான இந்தாம்மா கருவாட்டுக் கூடை முன்னால போ.. தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு.. போன்ற வசனங்கள் வெகு பிரபலம். தமிழ் சினிமாவில் முதன்முறையாக இப்படி ஒரு பாடல் இயற்றப்பட்டது. வெறும் ராகங்களையும், பாடகர்களின் குரல்களையும் கேட்டுக் கொண்டிருந்த ரசிர்களுக்கு இந்தப் பாடல் புது அனுபவமாக இருந்தது என்றே சொல்லலாம்.
கண் கலங்கிய நெப்போலியன்.. உறவுகள் சூழ கோலாகலமாக நடந்து முடிந்த மகன் திருமணம்..
ராசாத்தி என் உசுரு என்னதில்ல…
மணிரத்னம் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான திருடா திருடா படத்தில் இந்தப் பாடலுக்கு உருகாதவர்கள் எவரும் இலர். ரோஜா படத்தினைத் தொடர்ந்து மணிரத்னத்துடன் மீண்டும் திருடா திருடா படத்தில் இணைந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த ஒரு பாடல் போதும் ஏ.ஆர்.ரஹ்மான் திறமையைச் சொல்ல. எந்த இசைக்கருவிகளும் பயன்படுத்தாமல் இப்படியும் பாடல் உருவாக்கலாம் என்று ரசிகர்களுக்கு ராசாத்தி என் உசுரு என்னதில்ல.. என்ற பாடலைக் கொடுத்திருப்பார் ஏ.ஆர். ரஹ்மான். ஷாகுல் ஹமீது குரல் மட்டும் பாட பின்னனியில் ஹம்மிங்கிலேயே உருக வைத்திருப்பார்கள்.
ஓ மகசீயா..
இப்படியெல்லாம் வரிகள் இருக்குமா? சரிகமபதநி தெரியும் அதென்ன ஓ மகசீயா.. நாக்க முக்க நாக்கா.. டைலாமோ..? இந்த வார்த்தைகளைக் கண்டுபிடித்தது நம் விஜய் ஆண்டனி தான். அர்த்தமே இல்லாமல் மெட்டுக்கு ஏற்றாற் போல் வாயில் நுழைந்த இதுவரை நாம் பல பாடல்களில் கேள்விப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு ஒரு பாடலையே உருவாக்கி இருப்பார் விஜய் ஆண்டனி. மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படத்தில் இடம்பெற்ற ஓ மகசீயா.. ஒஹோ மகசீயா பாடல் மெலடியில் உருக வைக்கும். இந்தப் பாடலும் தமிழ்சினிமாவின் ஒரு புதிய முயற்சிதான்.
நீல வானம்.. நீயும் நானும்..
இவரைச் சொல்லாமல் அவ்வளவு சீக்கிரம் போய் விட முடியாது. உலக நாயகன் கமல்ஹாசன் தான். மன்மதன் அம்பு படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இடம்பெற்ற நீல வானம் பாடல். இந்தப் பாடலின் மேக்கிங்கைப் பார்த்திருக்கிறீர்களா? எல்லாமே ரிவர்ஸ் மோடில் அமைந்திருக்கும். பாடலில் ஒரு பிளாஷ்பேக்கையை முடித்திருப்பார் உலக நாயகன். நீல வானம்.. நீயும் நானும் பாடலும் ஒரு வித்தியாசமான முயற்சியில் எடுத்து வெற்றி பெற்ற பாடல்.
இது போல் பல பாடல்கள் தமிழ் சினிமாவில் இடம் பெற்றிருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த பாடல்களை மெண்ட் பண்ணுங்க..