அஜீத் படத்தின் கிளைமேக்ஸ்-க்கு வந்த சிக்கல்.. தடைகளைத் தாண்டி 175 நாட்கள் ஹிட் ஆன அதிசயம்

By John A

Published:

அஜீத் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டில் துரை இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் முகவரி. அஜீத் அப்போது உச்ச நடிகராக உருவாகிக் கொண்டிருந்த அச்சமயத்தில் இத்திரைப்படம் வெளியானது. 2000 ஆண்டுகளில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அமர்க்களம் படத்தில் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தனது அடுத்த படத்திலேயே மென்மையான கதாபாத்திரத்திற்கு மாறினார்.

ஸ்ரீ தர் என்ற இளைஞன் சினிமாவில் இசையமைப்பாளர் வாய்ப்புத் தேடுபவராக அதற்கு அவரது குடும்பத்தினரும், நண்பர்களும், காதலியும் உதவி செய்ய இறுதியில் ஜெயித்தாரா இல்லையா என்பது தான் கதை. சினிமா வாய்ப்பிற்காக அவர் படும் அவமானங்களையும், சிக்கல்களையும் இன்றும் சினிமா வாய்ப்புத் தேடும் ஒவ்வொரு இளைஞனின் தவிப்பை நடிப்பில் கொட்டியிருப்பார் அஜீத். இந்தப் படத்தில் இறுதியில் கிளைமேக்ஸ் காட்சியில் அஜீத் முதலில் தோல்வி கண்டு மீண்டும் சில வருடங்களுக்குப் பிறகு ஜெயிப்பது போன்ற கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

தியேட்டருக்கு வந்த முதல் நாளில் இந்தப் படத்தினைப் பார்த்தவர்கள் கிளைமேக்ஸில் அஜீத் அப்போதே ஜெயிப்பது போன்ற காட்சியை வைத்திருந்தால் படம் 275 நாட்களைத் தாண்டி ஓடும் என சொல்லியிருக்கின்றனர்.

குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர்.. அரசியல் படத்தினை எடுத்து கையைச் சுட்ட சம்பவம்..

தொடர்ந்து இதே போன்ற கருத்துக்கள் அன்றைய தினம் பரவ ஆரம்பித்தது. ஏனெனில் அதற்கு உதாரணமாக வசந்த மாளிகை படத்தில் கிளைமேக்ஸ் காட்சியை ஒத்துக் கொள்ளாததால் ரசிகர்கள் மீண்டும் கிளைமேக்ஸ் காட்சியை மட்டும மறுபடியும் படப்பிடிப்பு நடத்தி பின் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றி ரிலீஸ் செய்தனர்.

எனவே இதேபோன்று அஜீத் கடைசியில் வெற்றி பெறுவது போல் காட்சி அமைக்கக் கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இயக்குநர் கே.எஸ்-ரவிக்குமாரும் கிளைமேக்ஸ் காட்சியில் நான் நடிக்கிறேன் என்றும் கூறியும் உள்ளார். ஆனால் இயக்குநருக்கு இதில் உடன்பாடு இல்லை.

மேலும் அந்தத் தாக்கம் குறைந்து விடும் என்று கருதி உள்ளது உள்ளபடியே இருக்க, அஜீத்தும் கிளைமேக்ஸ் மாற்ற விருப்பம் தெரிவிக்கவில்லை. எனவே அப்படியிருந்தும் படம் 175 நாட்களைக் கடந்து ஓடியது. சிறந்த குடும்பப் படத்திற்கான மற்றும் சிறந்த நடன இயக்குநருக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தது.