எம்ஜிஆருக்கு ஜெயலலிதா துரோகம் செய்தாரா…?! என்ன சொல்கிறார் இந்த பிரபலம்…?

By Sankar Velu

Published:

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் அதிமுக உருவாக்கத்தின் போது 12 பேர்களில் ஒருவராக கையெழுத்து போட்டவருமான முன்னாள் எம்எல்ஏ. திருச்சி சௌந்தர்ராஜன். இவர் மக்கள் திலகம் எம்ஜிஆரின் தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் ஜெயலலிதா அவருக்கு செய்த துரோகம் குறித்தும் இவ்வாறு சொல்கிறார்.

எம்ஜிஆர் ஒரு அசைவப்பிரியர். எல்லாம் சாப்பிடுவார். கோழி, கருவாடு எல்லாம் சாப்பிடுவார். வாரத்தில் நாலு நாள் நான் வெஜ். கறிக்கொழம்பு தேங்காய்ப்பால்ல தான் வைப்பாங்க. நெத்திலி கருவாடு நிறைய சாப்பிடுவாங்க.

ஒரு தடவை இவரோட சாப்பாட்டுல பல்லியைத் தூக்கிப் போட்டுட்டாங்க தயாரிப்பாளர்கள். அது 54 காலகட்டத்துல. அதனால கொழம்பு ஊற்றினதும் கொஞ்சம் வாயில் வைத்து டேஸ்ட் பார்ப்பார். எம்ஜிஆர் என்ன சாப்பிடுகிறாரோ அதை லைட்மேன்கள் உள்பட படப்பிடிப்பில் உள்ள எல்லாரும் சாப்பிடணும் என்று அவர் தான் முதன் முதலில் கொண்டு வந்தார். எம்ஜிஆர் விரும்பி சாப்பிடுவது நெத்திலி கருவாடு. மீன், கறி கோழி, மீன் வறுவல் எல்லாமே சாப்பிடுவாரு.

இதையும் படிங்க… வாலிக்கும் சில்லுனு ஒரு காதல் டைரக்டருக்கும் வந்த சண்டை.. முன்பே வா பாடல் ஹிட்டாக காரணமே அந்த மோதலா?

எம்ஜிஆர் உடற்பயிற்சிக்கூடம் எல்லாமே வைத்துள்ளார். எவ்வளவு சாப்பிட்டாலும் தினமும் உடற்பயிற்சி செய்யத் தவற மாட்டார். எங்களுக்கு இணையா அவரும் நல்லா சாப்பிடுவாரு. எங்களுக்கு 35 வயசு இருக்கும். அப்போ அவருக்கும் 60 வயசு இருக்கும். பாத்ரூமுக்குப் போயி நிறைய சாப்பிட்டதை எல்லாம் வாயில கையை விட்டு எடுத்துருவாராம்.

ஜெயலலிதா தான் எம்ஜிஆருக்குத் துரோகம் பண்ணிட்டார். ஆர்.எம்.வீரப்பன் மூலமாக ஜெயலலிதா கட்சிக்குள்ள வந்தாங்களாம். 84ல் எம்ஜிஆர் ஜெயலலிதாவை பார்லிமெண்ட்டுக்கு அனுப்பினார். அங்கே போய் பெரிய லாபியை கிரியேட் பண்ணிட்டாங்க. ராஜீவ்காந்தி என எல்லாரிடமும் தொடர்பு வைத்துவிட்டார். அவர் செய்த சில செயல்களைப் பார்த்து இவர் அழுதே இருக்கிறாராம்.

இதையும் படிங்க… இளையராஜாவின் போட்ட டியூனை விரும்பாத ரஜினி.. வீரா படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு!

வேறு கட்சிக்குப் போக ஜெயலலிதா சதி செய்கிறார். அவரை நம்பி இந்த இயக்கத்தைத் தொடங்கவில்லை என்றும் எம்ஜிஆர் சொன்னாராம். இதுபற்றிய தகவல்கள் எல்லாம் வலம்புரி ஜான் எழுதிய வணக்கம் புத்தகத்தைப் படித்தால் தெரியும். அதில் உள்ளது எல்லாமே உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.