சும்மா அடிச்சு ஓட விடுறாரு!.. வெறித்தனமாக மிரட்டும் தனுஷ்!.. ராயன் படத்தின் விமர்சனம் இதோ!

By Sarath

Published:

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் லைட் ஹார்ட்டட் படமாக நகைச்சுவையுடன் கலந்து நட்பு, காதல் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 கோடி வசூல் வேட்டையை அள்ளியது. அந்த படத்தை குடும்பங்கள் கொண்டாடிய நிலையில், இளைஞர்களுக்காகவும் தனது ரசிகர்களுக்காகவும் தனுஷ் இயக்கியுள்ள படம் தான் ராயன்.

மகாபாரதம் காலம் தொட்டே அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்படும் சண்டை மற்றும் பகையுணர்வு எல்லாம் காட்டப்பட்ட நிலையில், இந்த காலத்திலும் அதே துரோகம் நீடித்து அப்படியே இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் தனுஷ்.

எந்த தம்பிகளுக்காக வாழ்க்கையையே அர்பணித்து அவர்களுக்காக வாழ்ந்து வருகிறாரோ அந்த தம்பிகளே காசுக்கு ஆசைப்பட்டு தனுஷுக்கு எதிராக மாறும் இடத்தில் தான் படத்தில் திடீர் திருப்பம் ஏற்படுகிறது.

தனுஷின் தம்பிகளாக சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தங்கையாக நடித்துள்ள துஷாரா விஜயனும் கத்தி எடுத்து சதக் சதக்கென குத்தி ரசிகர்களை அலற விடுகிறார்.

தனுஷ் மற்றும் அவரது உடன் பிறந்தவர்கள் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு செல்வராகவனின் வண்டியில் ஏறி தப்பித்து வரும் நிலையில், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பார்த்துக் கொள்ளும் நல்ல உள்ளமாக செல்வராகவன் நடித்து மிரட்டுகிறார்.

பிரகாஷ் ராஜ் பெரிதாக இந்த படத்தில் ஏதோ செய்யப் போகிறார். எஸ்.ஜே. சூர்யாவின் காட்சி அமைப்புகள் மிரட்டும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சில ஏமாற்றங்களும் ஏற்படுகின்றன.

படம் எங்கெல்லாம் கீழே விழப் பார்க்கிறதோ, அங்கெல்லாம் நான் வந்துட்டேன் என ஏ.ஆர். ரஹ்மான் ஓடி வந்து படத்தை தாங்கிப் பிடிப்பதால் நிச்சயம் ரசிகர்கள் இந்த ராயனை தியேட்டர்களில் கொண்டாடுவார்கள்.

அபர்ணா பாலமுரளி லோக்கல் சென்னை ஸ்லாங்கில் பேசுவதும், அவரது உடல்மொழி, நடிப்பு என அனைத்துமே அசத்தல். வரலட்சுமி சரத்குமாருக்கு எஸ்.ஜே. சூர்யாவின் மூத்த மனைவி ரோல் மட்டும் தான். விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகள் என சும்மா பிக் பாஸ் பிரபலங்களை நடிக்க வைத்தது போல வரலட்சுமிக்கு டம்மி ரோல் ஒதுக்கப்பட்டுள்ளது.

இடைவேளை காட்சியின் போது தம்பிகளுடன் சரவணனை போட்டுத் தள்ளும் காட்சியும் கிளைமேக்ஸில் அடங்காத அசுரனாக வந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் சண்டை செய்யும் காட்சிகளிலும் தனுஷின் நடிப்பு மிரட்டி எடுக்கிறது.

ராயன் – ராவண அவதாரம்!

ரேட்டிங் – 3.5/5.