தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்து வருபவர் தனுஷ். தற்போது தனது கேரியரில் அடுத்த கட்டமாக இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார். இவரது தந்தையை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் மற்றும் நடிகராவார்.
அதன்மூலம் சினிமாவில் அறிமுகமான தனுஷ் தனது விடாமுயற்சி மற்றும் உழைப்பினால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படம் மக்களுடைய ஆதரவு பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.
மக்களின் வரவேற்பை பெற்ற தனுஷ் தொடர்ந்து இயக்கத்திலும் நடிப்பிலும் சேர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய திரைப்படங்கள் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. மேலும் இவர் நடிப்பில் குபேரா திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தனுஷ் அவர்களுக்கு நியூஸ்18 அம்ரித் ரத்னா விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதை தென்னிந்தியாவில் இந்த முறை வாங்கி இருப்பது தனுஷ் மட்டும் தான். இவரது எக்ஸ் மாமனார் ரஜினிகாந்த் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த விருதை வென்றிருக்கிறார். அதன்படி மற்ற நடிகர்களுக்கெல்லாம் டப் கொடுத்து வருகிறார் தனுஷ் என்றே தான் சொல்ல வேண்டும். என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் சைலன்டாக இருந்து தனது வெற்றியை நோக்கி மட்டுமே பயணித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.