தனுஷ்-ன் அழகான புன்னகைக்கு காரணம் இவங்க தானா? ஊசி போட்டு அதிர வைத்த அக்கா

இயக்குநர் சிகரம் பாரதிராஜாவுக்கு அடுத்தபடியாக மண்மனம் சார்ந்த கதைகளை இயக்குவதில் வல்லவர் யாரென்றால் அது கஸ்தூரி ராஜா தான்.  தென் தமிழகத்து மக்கள் வாழ்க்கை முறைகளை இயற்கை அழகை திரையில் காட்டி அதில் முத்திரை பதித்தவர்.

இயக்குநர் விசுவிடம் உதவியாளராக இருந்து பின் ராஜ்கிரண் எடுத்த என் ராசாவின் மனசிலே படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து கிராமத்து கதைகளையே எடுத்தவர் தன் மகன்களான தனுஷ் மற்றும் செல்வராகவனை திரையில் அறிமுகப்படுத்த துள்ளுவதோ இளமை என்ற படத்தை எடுத்தார்.

dhanush 1

இது கஸ்தூரி ராஜா படமா என்று கேட்கும் அளவிற்கு இரட்டை அர்த்த வசனங்கள், காதல் காட்சிகள் போன்றவை இடம்பெற்றது. படமும் வெற்றி பெற்று தனுஷ் மற்றும் செல்வராகவனுக்கு சிறந்த தொடக்கத்தைக் கொடுத்தது. செல்வராகவன் இந்தப்படத்தில் பெரும்பாலான காட்சிகளுக்கு தந்தைக்கு உதவியாக இருந்ததால் இயக்குநர் பெயரில் அவரும் இடம்பிடித்தார்.‘

தனுஷ்-செல்வராகவன் ஆகிய இருவரும் தற்போது வரை திரையுலகையே ஆட்சி செய்யும் சகோதரர்கள் என்பதை அறியாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் தனுஷ்-ன் அந்த அழகிய புன்னகைக்குப் பின் அவரது அக்கா உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? தனுஷ், செல்வராகவனுக்கு இரு சகோதரிகள் உள்ளனர். அவற்றில் ஒருவர் பல் மருத்துவ நிபுணர்.

அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் இதுகுறித்த தெரிவித்த பல் மருத்துவரான அவரது அக்கா கார்த்திகா தேவி எங்கள் குடும்பத்தின் மொத்த அழகான புன்னகைக்கும் நான்தான் காரணம். அவ்வப்போது பல் சம்பந்தமான பிரச்சினைகள் என்றால் நானே அவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களின் அழகான புன்னகைகளை தக்க வைத்துள்ளேன் என்று கூறினார்.

அண்ணனுக்கு ஹிட் கொடுக்க ரெடியான சிறுத்தை சிவா : வெளியான கங்குவா மாஸ் போஸ்டர்

மேலும் அவர் கூறும் போது எனது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு தங்கள் குழந்தைகள் டாக்டராகவோ, இன்ஜினியராகவோ மாற வேண்டும் என்பது கனவு. அதன்படி தான் சேர்த்த பணத்தில் எனக்கு மணம் முடித்தால் ஒருவருக்கு மட்டுமே சொந்தமாகி விடும். ஆனால் அதே பணத்தில் மருத்துவருக்கு படிக்க வைத்தால் பல நோயாளிகளைக் குணப்படுத்தலாம் என்ற நோக்கில் என்னை பல் மருத்துவம் படிக்க வைத்தார் என்று அந்தப்பேட்டியில் கூறியுள்ளார் தனுஷின் அக்கா கார்த்திகா தேவி.