ரஜினியின் ‘பாட்ஷா’ பெயருக்கு சொந்தக்காரர்.. நடிகர் சரண்ராஜின் திரைப்பயணம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாணிக்கம் என்ற கேரக்டரிலும் அவரது நண்பர் கேரக்டரில் சரண்ராஜ், அன்வர் பாட்ஷா என்ற கேரக்டரிலும் நடித்திருப்பார். சரண்ராஜ் கொலை செய்யப்பட்டவுடன் தனது நண்பரின் பெயரை சேர்த்துக்கொண்டு மாணிக் பாட்ஷா என்று பெயர் மாற்றிக் கொள்வார். பாட்ஷா படத்தை பொருத்தவரை உண்மையான பாட்ஷா என்றால் அது சரண்ராஜ் தான் என்பதும் டைட்டில் கேரக்டரும் அவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சரண்ராஜ் சில நிமிடங்கள் மட்டும் வந்தாலும் அவருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக ‘பாட்ஷா’ அமைந்தது. ரஜினியுடன் நடித்ததால்தான் எனக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்தது என்றும் தமிழ் சினிமாவில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் என்றால் அது பாட்ஷா தான் என்றும் சரண்ராஜ் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?

சரண்ராஜ்  கடந்த 1958-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அவருக்கு திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவர் 24 வயதில் கன்னட திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார்.

saranraj1

கன்னட திரைப்படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த அவருக்கு  தமிழிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 1987-ம் ஆண்டு நீதிக்கு தண்டனை என்ற திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கலைஞர் மு.கருணாநிதியின் வசனத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து சரண்ராஜ்க்கு பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பூவுக்குள் பூகம்பம், கழுகுமலை கள்ளன், நான் சொன்னதே சட்டம், சிகப்பு தாலி, காளிச்சரண், குற்றவாளி ஆகிய படங்களில் நடித்தார். இதில் சில படங்களில் அவர் நாயகனாகவும் நடித்திருப்பார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் அவர் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க தொடங்கினார்.

கே.பாலசந்தர் படத்தில் அறிமுகம்.. கமல் ரஜினியுடன் நடிப்பு.. நடிகர் திலீப் திரை பயணம்..!

ராஜநடை, பணக்காரன், அதிசய மனிதன், புதுப்புது ராகங்கள், சீதா, பாண்டியன் உள்பட பல படங்களில் நடித்தார். ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்தார். இந்த படம் அவருக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

saranraj

இதனையடுத்து சரத்குமார் நடிப்பில் உருவான வேடன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் அவருக்கு கிடைத்தது. அதன்பின்னர் ரஜினிகாந்த் நடித்த வீரா, பாட்ஷா ஆகிய படங்கள் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

ஒரு கட்டத்தில் அவர் தமிழ் படங்களில் நடிப்பதை திடீரென நிறுத்திவிட்டார். கடந்த 2008-ம் ஆண்டு  ஜீவன் நடித்த தோட்டா என்ற திரைப்படத்தில் நடித்த அவர் அதன் பிறகு பல ஆண்டுகளாக தமிழ் படத்தில் நடிக்கவில்லை, இருப்பினும் அவர் மலையாளம் ஹிந்தி, கன்னட படங்களில் நடித்தார். தற்போதும் அவர்  கன்னட படங்களில் பிசியாக உள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லேபிள் என்ற வெப்தொடரில் அவர் நடித்துள்ளார். இந்த தொடர் அவருக்கு மீண்டும் தமிழ் திரை உலகில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நடிகர் சரண்ராஜ் சில படங்களை தயாரித்துள்ளார். ‘அண்ணன் தங்கச்சி’ உள்பட ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரை உலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!

நடிகர் சரண்ராஜ் கல்பனா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.