தனுஷின் ராயன் எப்படி இருக்கு? வெளியான டிவிட்டர் விமர்சனம்..

By John A

Published:

நடிகர் தனுஷ் நடித்துள்ள ராயன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. தனுஷின் 50-வது படமான ராயன் படத்தினை அவரே இயக்கி நடித்துள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷ்ரா, அபர்ணா முரளி, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பவர் பாண்டி படத்திற்குப் பிறகு தனுஷுக்கு இது இயக்குநராக இரண்டாவது படம். இப்படத்தின் டிரைலரும்,பாடல்களும் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பினைப் பெற்ற நிலையில் இன்று படம் வெளியாகி பாஸிடிவ் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

அடுத்த தேவர் பிலிம்ஸ் ஆகிறார் இயக்குநர் பிரபு சாலமன்.. அடுத்தபடத்தில் இடம் பெறப்போகும் காட்டு மிருகம்

ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்களைப் பார்ப்போம்..

ராயன் படத்தினை வெற்றிமாறன் இயக்கத்தைப் போலவே தனுஷ் இயக்கியிருக்கிறார் என்றும், அடுத்த கோலிவுட்டின் ரத்தம் சிந்தவைக்கும் இயக்குநராக தனுஷ் மாறியிருக்கிறார் என்றும், தனுஷ் ஆராவாரமாக இருக்கிறார் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

 Rayan 1

வடசென்னை படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே ஸ்டைலில் மற்றுமோர் வெற்றிப் படம் என மற்றொரு ரசிகர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

Rayan 2

தனுஷின் 50-வது படம் சிறப்பாக வந்திருக்கிறது எனவும். சந்தீப் கிஷன் நடிப்பு சூப்பர் எனவும், இடைவேளைக் காட்சி சிலிர்க்க வைப்பதாகவும், படத்தில் நிறைய டிவிட்ஸ்ட்கள் உள்ளதாகவும் மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

Rayan 3

இயக்குநராக தனுஷின் பவர் பாண்டி சிறந்த படம் என்றும், ராயன் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

 

Raayan 4