Devara Review: RRR படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஜுனியர் என்.டி.ஆர். நடித்துள்ள திரைப்படம் தான் தேவரா. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான தேவரா படத்தினை கொராட்டாலா சிவா இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் முதன்முறையாக தேவரா மூலம் தென்னிந்திய மொழியில் கால் பதித்திருக்கிறார்.
மேலும் ஜுனியர் என்.டி.ஆருக்கு வில்லனாக சைஃப் அலி நடித்திருக்கிறார். இரட்டை வேடத்தில் இதில் மிரட்டியிருக்கும் ஜுனியர் என்.டி.ஆர். நடிப்பை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தேவரா படத்தைப் பார்த்தவர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஜுனியர் என்.டி.ஆர்-ன் மாஸ் ஓப்பனிங் மற்றும் அனிருத்தின் இசை படத்திற்குப் மிகப்பெரிய பலம் என்றும், மற்ற கதாபாத்திரங்களுக்கான திரைக்கதை வலுவில்லை எனவும், ஜான்வி கபூர் படத்தில் வீணடிக்கப்பட்டுள்ளார் எனவும், மொத்தத்தில் சுமாரான பொழுதுபோக்குத் திரைப்படம் எனப் பதிவிட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.
தேவரா படத்திற்குப் பிளஸ்ஸாக ஜுனியர் என்.டி.ஆர்., அனிருத் மற்றும் இடைவேளை சண்டைக்காட்சிகள் ஆகியவையும், மைனஸாக இரண்டாம் பாதி, கதை, கிளைமேக்ஸ், மோசமான திரைக்கதை ஆகியவை அமைந்துள்ளது என மற்றொரு விமர்சனம் எழுந்துள்ளது.
ஜான்வி, சைஃப் அலி கதாபாத்திரங்கள் சிறப்பு எனவும், மற்ற கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் இல்லை எனவும், 6 வருடங்கள் கழித்து வெளியனா ஜுனியர் என்.டி.ஆர். படம் திருப்திகரமாக இல்லை எனவும் மற்றொரு ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் தேவரா கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.